பசுமைமிகு தமிழகமாக மாற்ற வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

M K Stalin Tamil nadu
By Sumathi Sep 24, 2022 06:53 AM GMT
Report

தமிழகத்தை பசுமைமிகு தமிழகமாக மாற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பசுமை இயக்கம்

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், தமிழக வனத்துறை சார்பில் இயற்கை வளங்களை காக்கும் நோக்கத்தில் தமிழகத்தில் பசுமை இயக்கம் தொடக்க விழா நடைபெற்றது.

பசுமைமிகு தமிழகமாக மாற்ற வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | Mk Stalin Started Pasumai Thamizhagam Iyakkam

விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பசுமை தமிழகம் இயக்கத்தினை தொடங்கி வைத்து மரக்கன்றுகளை நட்டு வைத்து சிறப்புரையாற்றினார். அதில், இயற்கையை காப்பது நம்முடைய இயல்பிலேயே உள்ளது.

மு.க.ஸ்டாலின்

வளர்ச்சியை நோக்கி செல்லும் போது இயற்கையையும் சேர்த்து காப்பாற்றி வருகிறோம். தமிழகத்தை பசுமைமிகு தமிழகமாக மாற்ற வேண்டும் ஒவ்வொருவரும் செடி, மரம் வளர்க்க வேண்டும்.

பசுமைமிகு தமிழகமாக மாற்ற வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | Mk Stalin Started Pasumai Thamizhagam Iyakkam

தமிழகத்தை பசுமைமிகு தமிழகமாக மாற்ற வேண்டும் என தெரிவித்தார். தமிழகத்தில் 23.8 சதவீதமாக உள்ள காடுகளின் பரப்பளவு 10 ஆண்டில் 33 சதவீதமாக அதிகரிக்க இந்த பசுமை தமிழகம் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் 2022-23 நிதி ஆண்டில் தமிழகத்தில் 2.8 கோடி மரங்களை நட அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது.