இது வெளிநாடா..? தமிழ்நாடா..? ஸ்பெயின் தமிழர்களிடத்தில் மு.க.ஸ்டாலின்..!
ஸ்பெயின் நாட்டில் சுற்று பயணம் மேற்கொண்டு வரும் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், அங்கு ஸ்பெயின் தமிழர்களுடன் முதல்வர் என்ற நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்டார்.
ஸ்பெயினில் முதல்வர்
வெளிநாட்டு முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு ஈர்க்க, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டில் தொழில் முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.
அங்கு முன்னதாக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட அவர், ஐரோப்பா கண்டத்தின் 2-வது பொருளாதாரமான ஸ்பெயின் நாட்டிற்கு இந்தியாவின் 2-வது பொருளாதார மாநிலமான தமிழ்நாட்டின் முதலமைச்சர் முக ஸ்டாலின் என்றும் உரையாற்றினார்.
இந்த மாநாட்டை தொடர்ந்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்ய, பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இன்று "ஸ்பெயின் தமிழர்களுடன் முதல்வர்" என்ற நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
ஸ்பெயினில்தான் இருக்கிறோமா அல்லது அன்னைத் தமிழ்நாட்டிற்குத் திரும்பிவிட்டோமா என்று எண்ணத்தகுந்த வாஞ்சையான வரவேற்பை அளித்த ஸ்பெயின் வாழ் தமிழர்களின் அன்புக்கிடையில்...#Madrid pic.twitter.com/1sZ8AZBrCW
— M.K.Stalin (@mkstalin) February 5, 2024