தடைகள் என்பது உடைத்தெறியத்தான் - மாணவர்களுக்கு Motivation கொடுத்த முதல்வர்!
வெற்றி ஒன்றே இலக்காக இருக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.
தமிழ்ப் புதல்வன்
அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களுக்கு மாதம் ₹1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்ப்புதல்வன் திட்டம் என் மனதிற்கு நெருக்கமானது என்பதால் அதை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது
பின்னர் தமிழ்ப் புதல்வன் திட்டத் தொடக்க விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,'' இந்தத் திட்டத்தின் மூலம், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று கல்லூரிகளில் சேரும் 3 லட்சத்து 28 ஆயிரம் மாணவர்கள் மாதந்தோறும் ரூ.1000 பெறுவார்கள் என்று தெரிவித்தார்.
நம்முடைய திராவிட மாடல் அரசு பொறுப்பேற்று மகளிருக்கு விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை, காலை உணவுத் திட்டம், புதுமை பெண் திட்டம், நாம் முதல்வன் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. நாம் முதல்வன் திட்டத்தின் கீழ் 28 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ள தாக என்று தெரிவித்தார்.
வினேஷ் போகத்
தொடர்ந்து வினேஷ் போகத் குறித்து பேசினார். ஒலிம்பிக்கில் பங்கேற்ற சகோதரி வினேஷ் போகத் எப்படிப்பட்ட தடைகளை எதிர்கொண்டார் என அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் பலவீனமாக வீட்டிற்குள் முடங்கிவிடாமல், தைரியமும், தன்னம்பிக்கையும், அசாத்திய துணிச்சலும் கொண்ட பெண்ணாக போராடி நாம் அனைவரும் பாராட்டும் அளவிற்கு கொடி கட்டி பறக்கிறார்.
தடைகள் என்பது உடைத்தெறியத்தான்.தடைகளை பார்த்து ஒருபோதும் சோர்ந்துவிடக்கூடாது. வெற்றி ஒன்றே இலக்காக இருக்க வேண்டும். உங்கள் மேல் உங்களைவிட நான் அதிக நம்பிக்கை வைத்துள்ளேன். உங்களுக்கு பின் உங்கள் பெற்றோர் மட்டுமல்ல திமுக அரசும் உள்ளது என்று வினேஷ் போகத் குறித்து மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.