இந்தி அலுவல் மொழியே...தேசிய மொழியல்ல - மீண்டும் ஹிந்தி திணிப்பா..? முதல்வர் ஆவேசம்.!

M K Stalin DMK Chief Minister of Tamil Nadu
By Karthick Dec 14, 2023 08:08 AM GMT
Report

 இந்தி அலுவல் மொழியே தவிர தேசிய மொழியல்ல என்று அவருக்கு யார் சொல்வது? என்று முதல்வர் முக ஸ்டாலின் ட்விட்டர் தளத்தில் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.

முக ஸ்டாலின் பதிவு

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், கோவா விமான நிலையத்தில் தமிழ்ப் பெண் ஒருவரிடம் இந்தியில் பேசி, அவர் இந்தி தெரியாது என்று சொன்னதும் துணை ராணுவ வீரர், வீரர் ஒருவரால் மிரட்டப்பட்டுள்ளார்.

mk-stalin-slams-women-assaulted-not-knowing-hindi

"தமிழ்நாடு இந்தியாவில்தானே இருக்கிறது" என்றும், "இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தியைக் கற்றாக வேண்டும்" என்றும் பாதுகாப்புப் படை வீரர் பாடம் எடுத்துள்ளார்.

ரூ.6 ஆயிரம் டோக்கன் இன்று முதல்.. எங்கு, எப்படி வழங்கப்படும் - முக்கிய தகவல்!

ரூ.6 ஆயிரம் டோக்கன் இன்று முதல்.. எங்கு, எப்படி வழங்கப்படும் - முக்கிய தகவல்!

இது கடும் கண்டனத்துக்குரியது. இந்தி அலுவல் மொழியே தவிர தேசிய மொழியல்ல என்று அவருக்கு யார் சொல்வது?

பல்வேறு மொழி பேசும் மக்களின் கூட்டாட்சி நாடு இந்தியா. கூட்டாட்சித் தன்மையை வலியுறுத்தும் வகையில்தான் மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் செயல்பட வேண்டும். விமான நிலையங்களில் அனைத்து மொழிகளுக்கும் உரிய மதிப்பும் மரியாதையும் வழங்கப்பட வேண்டும் என்று தனது பதிவில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.