டிவியில் முகம் வர வேண்டுமென என எடப்பாடி பழனிசாமி பேசுகிறார் - முதல்வர் ஸ்டாலின்

M K Stalin Madurai Edappadi K. Palaniswami
By Karthikraja Oct 26, 2024 09:35 AM GMT
Report

 மெட்ரோ திட்ட நிதியை விரைவில் வழங்க ஒன்றிய அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின்

சென்னை, அண்ணா அறிவாலயம் வளாகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (26.10.2024) செய்தியாளர்களை சந்தித்தார். 

mk stalin

மதுரை கனமழையில் அரசின் நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, மழை தொடர்ந்து பெய்யவில்லை. நேற்றுதான் பெய்திருக்கிறது. இரவோடு இரவாக தண்ணீரை எல்லாம் எடுத்தாகிவிட்டது.

உங்கள் தந்தையாக மன்றாடிக் கேட்கிறேன் - முதல்வர் ஸ்டாலின் உருக்கம்

உங்கள் தந்தையாக மன்றாடிக் கேட்கிறேன் - முதல்வர் ஸ்டாலின் உருக்கம்

மதுரை கனமழை

மாவட்டத்தின் 2 அமைச்சர்களும் முகாமிட்டு பணி மேற்கொண்டு வருகிறார்கள். 8 இடங்களில் தான் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்திருக்கிறது. வேறு ஒன்றும் பிரச்சனையில்லை. இன்றைக்கு மழை வரும் என்று வானிலை மையம் முன்னெச்சரிக்கை அறிவிப்பு செய்திருக்கிறது.

அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கிறது. சென்னையிலிருந்து பொறுப்பு அதிகாரிகளை அனுப்பி வைத்திருக்கிறோம். அனைத்து நடவடிக்கைகளையும் உடனுக்குடன் செய்யவேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். நிவாரணப் பணிகளும் அங்கு நடந்து கொண்டிருக்கிறது என் கூறினார். 

முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் மழை பெய்தால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் போன்று மதுரை போன்ற மாவட்டங்களுக்கு இதுபோன்ற திட்டங்கள் ஏதாவது உள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்ட போது, "அனைத்து ஊர்களிலும் மாநகராட்சி சார்பாக பாதாள சாக்கடைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இப்போது மழை வருவதை வைத்து அதற்கேற்றார்போல் நாங்கள் முடிவெடுப்போம்" என தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி

மகளிர் உரிமைத் தொகையை அரசு கடன் வாங்கித் தான் ஒவ்வொரு மாதமும் வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்ற எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு குறித்து கேட்ட போது, "அவர் சொல்லிக்கொண்டு இருப்பார். அவருக்கு வேறு வேலையே கிடையாது. அவர் பெயர் பத்திரிகையில் வரவேண்டும். அவர் முகம் அடிக்கடி டிவியில் வரவேண்டும் என்பதற்காக சொல்லிக் கொண்டிருப்பார். அதற்கெல்லாம் நாங்கள் கவலைப்படுவதில்லை.

ஏற்கனவே ஒன்றிய அரசு அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுத்து மெட்ரோ திட்டத்திற்கு நிதி ஒதுக்கி அறிவித்திருக்கிறார்கள். அதனால் அந்த நிதியை விரைவில் வழங்கவேண்டும் என்று ஒன்றிய அமைச்சரிடம் இன்று நாங்கள் சொல்லியிருக்கிறோம்" என கூறினார்.