உங்கள் தந்தையாக மன்றாடிக் கேட்கிறேன் - முதல்வர் ஸ்டாலின் உருக்கம்
போதைப்பழக்கத்தை கைவிடுமாறு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் வைத்துள்ளார்.
போதைப்பொருள் பழக்கம்
தமிழ்நாட்டில் போதைப்பொருள் பழக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதனால் குற்ற சம்பவங்களும் அதிகரித்துள்ளன.
போதைப்பொருள் பழக்கம் மாணவர்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ள நிலையில் அதை முற்றிலும் ஒழிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஸ்டாலின் வேண்டுகோள்
இந்நிலையில் போதைப்பழக்கத்தை கை விடுமாறு தமிழக முதல்வர் ஸ்டாலின் வீடியோ மூலம் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்.
போதை இல்லா தமிழ்நாட்டை உருவாக்கிட ஒன்றிணைவோம்#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR |#Drug_Free_TamilNadu@CMOTamilnadu @mkstalin@Udhaystalin
— TN DIPR (@TNDIPRNEWS) October 24, 2024
@mp_saminathan pic.twitter.com/vsAVQioKgq
இந்த வீடியோவில் பேசிய அவர், "தமிழ்நாட்டில் மாணவர்கள், இளைஞர் சமுதாயத்திற்கு உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவனாக, உங்கள் தந்தையாக ஒரு உருக்கமான வேண்டுகோள். போதையின் பாதையில் யாரும் போக வேண்டாம் என்று மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். போதை ஒழியட்டும், பாதை ஒளிரட்டும்" என்று கூறியுள்ளார்.
விஜய் ஆண்டனி
இந்த வீடியோவில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியும் போதைக்கு எதிராக தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற தென் இந்திய காவல்துறை இயக்குநர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின் போதை ஒழிப்பிற்கு எதிராக அணைத்து மாநிலங்களும் இணைந்து செயல்பட வேண்டுமென கோரிக்கை வைத்ததோடு, தமிழக அரசு போதை பொருளை ஒழிக்க எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் பேசினார்.