இது தமிழ்நாடு! உங்கள் அரசியல் விளையாட்டு எடுபடாது - மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசி தாக்கப்பட்டதற்கு முதலமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
செருப்பு வீச்சு
ராணுவ வீரர் உடலுக்கு மரியாதை செலுத்த விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த அமைச்சர் கார் மீது செருப்பு வீசப்பட்டது.இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் பாஜகவினரை அப்புறப்படுத்தினர்.மேலும் செருப்பு வீசிய பாஜகவினர் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், நாட்டின் விடுதலையின் பவளவிழா ஆண்டில் மூவண்ணக்கொடியை போற்றுவோம்.
மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட உண்மையான தியாகிகளையும் போற்றுவோம். தேசியக்கொடி பொருத்தப்பட்ட அமைச்சரின் கார் மீது செருப்பு வீசி, விடுதலைநாளின் பவள விழா மகத்துவத்தையே மலினப்படுத்தி இருக்கிறார்கள்.
அரசியல் லாபம் தேட, சட்டவிதிக்கு புறம்பாக, சட்டம்-ஒழுங்கை சேர்குலைக்க தேசிய கொடியை அவமதித்துள்ளனர். இது தமிழ்நாடு இங்கே உங்கள் அரசியல் விளையாட்டு எடுபடாது.
தப்பவிட மாட்டோம்
தமிழ்நாட்டில் இதுபோன்று செயல்களில் ஈடுபட்டால் சட்டப்படி கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். திமுக ஒரு ஜனநாயக இயக்கம். அறவழியில்தான் அது பல நெருக்கடிகளை எதிர்கொண்டு வென்றிருக்கிறது.
சமூக விரோதிகளைக் கொண்ட அரசியல் வீணர்கள் செயல்படுவார்களேயானால் அவர்களைச் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பவிட மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.