அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீச்சு
நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர்கள் அஞ்சலி
தற்கொலை படை தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல் மதுரை விமான நிலையம் வந்தடைந்தது.
அப்போது ராணுவ வீரர் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. லட்சுமணன் உடலுக்கு அமைச்சர்கள் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் உள்ளிட்ட அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
அப்போது ராணுவ வீரர் உடலுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மரியாதை செலுத்தினார்.
அமைச்சர் கார் மீது காலணி வீச்சு
அமைச்சர்கள் மரியாதை செலுத்திய பின்பு தான் பாஜகவினர் மரியாதை செலுத்த அனுமதிக்கப்பட்டதால் திமுக, பாஜகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் காரில் புறப்பட்டு சென்றார். அப்போது அவரின் காரை வழிமறித்த பாஜகவினர் கார் மீது காலணியை வீசினா்.
இதையடுத்து அங்கிருந்த போலீசார் பாஜகவினரை அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.