இதுதான் பாஜகவின் பசப்பு அரசியல் - முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

M K Stalin Tamil nadu DMK BJP Narendra Modi
By Karthikraja Dec 21, 2024 11:51 AM GMT
Report

 அம்பேத்கரை இழிவுபடுத்திப் பேசுவது பாஜகவின் உயர்வர்க்க பாசிச முகத்தை தோலுரித்துக் காட்டிவிட்டது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின்

பாராளுமன்றத்தில் திமுக எம்பிக்களின் செயல்பாடு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

mk stalin

இந்த அறிக்கையில், "இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் வீறுகொண்ட வீரர்களாக திமுக. உறுப்பினர்கள் முழங்கி இருக்கிறார்கள். மற்ற மாநில எம்.பிக்களுக்கு முன்னோடிகளாக கழக எம்பிக்கள் செயல்படுவதைப் பார்த்து - நூறாண்டு கண்ட திராவிட இயக்கத்தின் தலைவராக நான் எண்ணி எண்ணி மகிழ்கிறேன். 

அம்பேத்கர் குறித்து அமித்ஷா சர்ச்சை பேச்சு - முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி

அம்பேத்கர் குறித்து அமித்ஷா சர்ச்சை பேச்சு - முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி

திமுக எம்.பிக்களின் செயல்பாடு

'ஒரே நாடு ஒரே தேர்தலை' கடுமையாக எதிர்த்துப் பேசிய டி.ஆர்.பாலு, 'மதுரை டங்ஸ்டன் கனிம சுரங்க அனுமதியை ரத்து செய்யுங்கள்' என்று அனல் பறக்கப் பேசிய தங்கை கனிமொழி, 'அவைக்குப் பிரதமரே வருவதில்லை' என்று முழங்கிய திருச்சி சிவா, 'அரசியலமைப்புச் சட்டத்தின் ஆறு கட்டமைப்புக் கூறுகளும் - கேசவானந்த பாரதி வழக்கும்' என அரசியல்சட்ட நுணுக்கம் நிறைந்த ஆ.இராசா 

mk stalin

மாநில உரிமைகளைப் பற்றியும், மதவாத அரசியல் அச்சுறுத்தல் குறித்தும் உரையாற்றிய ஜெகத்ரட்சகன், 'வானிலை அறிவிப்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்துக' என தயாநிதி மாறன் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் ஒன்றிய அரசைத் தட்டி எழுப்பினார்கள்.

தமிழ்நாட்டு மக்கள் 'நாற்பதுக்கு நாற்பது' என்ற தேர்தல் வெற்றியைத் தந்தபோது, 'நாடாளுமன்றத்துக்குச் சென்று இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?' என்று சிலர் கேள்வி எழுப்பினார்கள். அவர்களெல்லாம் வாயடைத்துப் போகும் அளவிற்குத் திமுக எம்.பி.க்களின் செயல்பாடு அமைந்துள்ளது.

ஆக்கப்பூர்வமான விவாதம்

அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம் என, தாம் பொறுப்பேற்று பதில் சொல்லியே ஆகவேண்டிய அனைத்திலும் கனத்த மவுனம் காக்கும் பிரதமர் அவர்கள், நாடாளுமன்றத்தில் பாஜகவினரால் ஜனநாயகம் படாத பாடு பட்டபோது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

அரசின் தோல்விகள் குறித்த எந்த விவாதமும் நடைபெற்று விடக்கூடாது என்பதையே மனதில் வைத்து பாஜக எம்.பிக்கள் செயல்பட்டதை நாம் காணமுடிந்தது. ஆக்கப்பூர்வமான விவாதம் செய்வதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்பது நாடாளுமன்றத்தைப் பொறுத்தமட்டில் அரிதான நிகழ்வாக பாஜக ஆட்சியில் மாறி விட்டதை எண்ணி ஒரு மிகப்பெரிய ஜனநாயக இயக்கமாம் தி.மு.கழகம் கவலை கொள்கிறது.

பாஜகவின் உயர்வர்க்க பாசிச முகம்

பாஜக ஆட்சியின் கையில் 'நாடாளுமன்ற ஜனநாயகம்' எப்படி பிய்த்து எறியப்பட்டுள்ளது என்பதற்கு இந்த குளிர்காலக் கூட்டத்தொடரே சாட்சி. அரசியல்சட்டத்தின் 75 ஆண்டு விழா கொண்டாட்டத்தின்போது, அச்சட்டத்தை உருவாக்கித் தந்த அண்ணல் அம்பேத்கரை ஒன்றிய உள்துறை அமைச்சரே அவதூறுசெய்து, இழிவுபடுத்திப் பேசுவது பாஜகவின் உயர்வர்க்க பாசிச முகத்தை தோலுரித்துக் காட்டிவிட்டது. இதுதான் பாஜகவின் பசப்பு அரசியல். 

mk stalin latest photo

ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் குரலாகக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டிய பிரச்சினைகள், எழுப்பிய மாநில உரிமை முழக்கங்கள், ஜனநாயகத்தைப் பாழ்படுத்தும் 'ஒரே நாடு ஒரே தேர்தலை' ஆணித்தரமாக எதிர்த்த நாடாளுமன்றக் குரல்கள் எல்லாம் பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான ஒன்றிய அரசின் செவிகளில் உரக்கவே விழுந்திருக்கும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது.

இனியும் ஒன்றிய அரசு திருந்தவில்லை என்றால் தமிழ்நாட்டின் உரிமைகளைத் தரவில்லையென்றால் தமிழ்நாட்டு மக்கள் உரிய நேரத்தில் மீண்டும் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்பது உறுதி" என தெரிவித்துள்ளார்.