கலவரம் செய்வது பாஜகவின் DNA; ஆட்சிக்கு வந்தால் திருப்பூர் மணிப்பூராகும் - மு.க. ஸ்டாலின்!
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஒட்டுமொத்த நாட்டுக்கே ஆபத்து என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பொதுக்கூட்டம்
நீலகிரி மற்றும் திருப்பூர் மக்களவை தொகுதி வேட்பாளர்களான ஆ.ராசா மற்றும் கே.சுப்பராயனை ஆதரித்து திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அவர் பேசியதாவது "ஜனநாயகத்தையும் மீட்கவும், சர்வதிகாரத்தை வீழ்த்தவும் நடக்கும் மிக முக்கிய தேர்தல். சமூகநீதியை நிலைநாட்ட வேண்டிய தருணம் இது. ராகுல் காந்தியின் கோவையின் ஒரு நாள் வருகை, பாகுபலி படம் போன்று பிரமாண்டமாக இருந்தது. மோடியின் மொத்த தமிழ்நாட்டு பிரசாரத்தையும் அது காலி செய்துவிட்டது.
ஒன்று சேர்ந்துள்ளோம்
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகத்துக்கு ஆபத்து, ஒட்டுமொத்த நாட்டுக்கே ஆபத்து. நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. கலவரம் செய்வது பாஜகவின் டி.என்.ஏவில் ஊறியது. திருப்பூரில் ஜி.எஸ்.டி குறித்து கேட்ட பெண்ணை பா.ஜ.கவினர் தாக்கியுள்ளனர்.

திருப்பூரை மணிப்பூராக மாற்றிவிடுவார்கள். பா.ஜ.க போன்ற கலவரக் கட்சிகளை நுழையவிட்டால், அமைதி போய்விடும். மோடியும், பாஜகவும் வீட்டுக்கும் கேடு... நாட்டுக்கும் கேடு. இந்தியா முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகள், பாசிசத்தை வீழ்த்த இண்டியா கூட்டணியாக ஒன்று சேர்ந்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவால் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு IBC Tamil
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil
அதிகரித்துச் செல்லும் பணவீக்கம் : அரசாங்கத்திடம் எந்த தீர்வும் இல்லை : முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு IBC Tamil