இந்த அண்ணாமலை இல்லை.. எத்தனை மலை வந்தாலும் சரி - கொந்தளித்த செல்லூர் ராஜு!
அண்ணாமலை பேச்சுக்கு எல்லாம் இடம் கொடுக்க வேண்டியதில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
செல்லூர் ராஜு
மதுரை மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் சரவணன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வாக்கு சேகரித்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் "இன்னும் ஒரு வாரம் கழித்து ஜூன் 4-ம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எங்கு இருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியும்.
எந்த மலை வந்தாலும் சரி, இந்த அண்ணாமலை இல்லை வேறு எத்தனை மலை வந்தாலும் சரி அதிமுகவை எதுவும் செய்ய முடியாது. அண்ணாமலை அரசியலுக்கு வரும்பொழுது நடிகர் கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்றவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றதாக கூறினார்.
பேச விரும்பவில்லை
அண்ணாமலை பெயர் உள்ளதால் அண்ணாமலை சொல்லித்தான் வந்தது போலவும், ஆண்டவன் சொல்கிறான் அண்ணாமலை செய்றான் என்று சூப்பர் ஸ்டார் படங்களில் தான் சொல்வார். இந்த அண்ணாமலை சூப்பர் ஸ்டார் கிடையாது, அண்ணாமலை பேச்சுக்கு எல்லாம் இடம் கொடுக்க வேண்டியதில்லை.
நான் அவரை பற்றி நிறைய பேசி விட்டேன். அவர் ஏன் இன்னும் பேசுகிறார் என்று தெரியவில்லை. அண்ணாமலைக்கு அரசியலே தெரியாது. அவரை ஏற்கனவே கிழிகிழியென்று கிழித்துவிட்டேன். அவரை பெற்றி பேச விரும்பவில்லை" என்று தெரிவித்துள்ளார்.