தமிழக எழுத்தாளர்கள் நோபல் பரிசை இலக்காக கொள்ள வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

M K Stalin Tamil nadu Nobel Prize
By Karthikraja Jan 18, 2025 11:35 AM GMT
Report

 தமிழ்நாட்டை சேர்ந்த எழுத்தாளர்கள் நோபல் பரிசு வெல்வதையும் இலக்காக கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை பன்னாட்டு புத்தக திருவிழா

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 3வது சென்னை பன்னாட்டு புத்தக திருவிழா கடந்த ஜனவரி 16 முதல் இன்று(18.01.2025) வரை 3 நாட்கள் நடைபெற்றது. இதில் 60க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த பதிப்பகங்கள் கலந்து கொண்டன. 

chennai international book fair 2025

இன்று(18.01.2025) நடைபெற்ற இதன் நிறைவு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, பல்வேறு விருதுகளை வழங்கினார். மேலும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் பதிப்பித்த 75 நூல்கள் மற்றும் 2023 மற்றும் 2024ம் ஆண்டிற்கான மொழி பெயர்ப்பு மானியம் வாயிலாக மொழிபெயர்க்கப்பட்ட 30 நூல்களை வெளியிட்டார். 

வேதியலுக்கான நோபல் பரிசு; தேர்வான Google ஊழியர்கள் - இவர்கள் சாதித்தது என்ன?

வேதியலுக்கான நோபல் பரிசு; தேர்வான Google ஊழியர்கள் - இவர்கள் சாதித்தது என்ன?

நோபல் பரிசு

2023 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது சென்னை பன்னாட்டு புத்தக திருவிழாவில் 24 நாடுகள் பங்குபெற்று 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், 2024ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது சென்னை பன்னாட்டு புத்தக திருவிழாவில் 40 நாடுகள் பங்குபெற்று 752 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டன. 

chennai international book fair 2025

இந்த ஆண்டு நடைபெற்ற மூன்றாவது சென்னை பன்னாட்டு புத்தக திருவிழாவில், 78 அரங்கங்கள், குழந்தைகளுக்காக 3 சிறப்பு அரங்கங்கள் என 60க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றுள்ளன. இதில் 1125 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டன. இதில் தமிழ்மொழியிலிருந்து அயலக மொழிகளுக்கு 1005 ஒப்பந்தங்களும், அயலகமொழிகளிலிருந்து தமிழ் மொழிக்கு 120 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. 

இது குறித்து பதிவு வெளியிட்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், "உலகை தமிழுக்கு கொண்டு வருதல், தமிழை உலகுக்கு கொண்டு செல்லுதல் என தமிழக பள்ளிக்கல்வி துறை எடுத்த முயற்சி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. 

திமுக அரசு அளித்த மானியம் மற்றும் ஆதரவின் மூலம் தமிழ் இலக்கியங்கள் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெறுகின்றன. தமிழ்நாட்டை சேர்ந்த எழுத்தாளர்கள், ஞானபீட விருது மட்டுமின்றி நோபல் பரிசு வெல்வதையும் இலக்காக கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார்.