வேதியலுக்கான நோபல் பரிசு; தேர்வான Google ஊழியர்கள் - இவர்கள் சாதித்தது என்ன?
2024 ஆம் ஆண்டின் வேதியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நோபல் பரிசு
கடந்த 1901ஆம் ஆண்டு முதல், வழங்கப்பட்டு வரும் நோபல் பரிசு(nobel Prize), உலகிலேயே அதிகம் கவனம் பெறக்கூடிய பரிசுகளில் ஒன்றாக கருதப்பட்டு வருகிறது.
இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு இந்த பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
வேதியலுக்கான நோபல்
மருத்துவம், இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று 2024 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமெரிக்காவை சேர்ந்த டேவிட் பேக்கர்(David Baker), ஜான் எம். ஜம்பர்(John M. Jumper) மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த டெமிஸ் ஹசாபிஸ்(Demis Hassabis) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
புரதங்கள் தொடர்பான ஆராய்ச்சிக்காக இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜான் எம். ஜம்பர் மற்றும் டெமிஸ் ஹசாபிஸ் கூகிளின் deep mind பிரிவில் பணிபுரிபவர்கள்.
BREAKING NEWS
— The Nobel Prize (@NobelPrize) October 9, 2024
The Royal Swedish Academy of Sciences has decided to award the 2024 #NobelPrize in Chemistry with one half to David Baker “for computational protein design” and the other half jointly to Demis Hassabis and John M. Jumper “for protein structure prediction.” pic.twitter.com/gYrdFFcD4T
ஆல்பிரட் நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10ஆம் தேதி இவர்களுக்கு தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் 11 மில்லியன் ஸ்வீடிஸ் கிரௌன்ஸ் (இந்திய மதிப்பில் ரூ.8.32 கோடி) ஆகியவை வழங்கப்பட உள்ளது.