இயற்பியலுக்கான நோபல் பரிசு; அமெரிக்கா, கனடா விஞ்ஞானிகள் தேர்வு - சாதித்தது என்ன?

United States of America Canada World
By Karthikraja Oct 08, 2024 01:00 PM GMT
Karthikraja

Karthikraja

in உலகம்
Report

 2024 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நோபல் பரிசு

கடந்த 1901ஆம் ஆண்டு முதல், வழங்கப்பட்டு வரும் நோபல் பரிசு(nobel Prize), உலகிலேயே அதிகம் கவனம் பெறக்கூடிய பரிசுகளில் ஒன்றாக கருதப்பட்டு வருகிறது. 

2024 nobel prize for physics

இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு இந்த பரிசு வழங்கப்பட்டு வருகிறது. 

மருத்துவத்திற்கான நோபல் பரிசுக்கு இருவர் தேர்வு - இவர்கள் சாதித்தது என்ன?

மருத்துவத்திற்கான நோபல் பரிசுக்கு இருவர் தேர்வு - இவர்கள் சாதித்தது என்ன?

இயற்பியலுக்கான நோபல்

மருத்துவத்திற்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பேராசிரியர் ஜான் ஜே.ஹாஃப் ஃபீல்டு(John J. Hopfield) மற்றும் கனடாவை சேர்ந்த பேராசிரியர் ஜெஃப்ரி இ. ஹிண்டன்(Geoffrey E. Hinton) ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

2024 nobel prize for physics

செயற்கை நரம்பியல் வலைப்பின்னல் மூலம் இயந்திரக் கற்றலைச் செயல்படுத்தும் கண்டுபிடிப்புக்காக இந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. 

ஆல்பிரட் நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10ஆம் தேதி இவர்களுக்கு தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் 11 மில்லியன் ஸ்வீடிஸ் கிரௌன்ஸ் (இந்திய மதிப்பில் ரூ.8.32 கோடி) ஆகியவை வழங்கப்பட உள்ளது.