தமிழ்நாட்டை கீழே தள்ள முயற்சிக்கிறார்கள் - UGC விதி குறித்து முதல்வர் ஸ்டாலின் காட்டம்

M K Stalin Tamil nadu Education University Grants Commission
By Karthikraja Jan 09, 2025 08:30 PM GMT
Report

 யுஜிசியின் புதிய விதி தமிழ்நாட்டை கீழே தள்ளும் முயற்சி என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

யுஜிசியின் புதிய விதி

பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் செய்வது தொடர்பாக யுஜிசி பல்வேறு திருத்தங்களை செய்து வரைவு அறிக்கை வெளியிட்டது. 

mk stalin about ugc new rule

யுஜிசியின் இந்த முடிவிற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த அறிவிப்பை திரும்ப பெற கோரி தமிழக சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

பல்கலைக்கழகங்களை மாநில அரசிடமிருந்து அபகரிக்க முயற்சி - முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

பல்கலைக்கழகங்களை மாநில அரசிடமிருந்து அபகரிக்க முயற்சி - முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

மு.க.ஸ்டாலின்

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் பக்கத்தில் இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில், கல்லூரிகள் இயங்குவது மாநில அரசின் இடத்தில், பேராசிரியர்களுக்கு ஊதியம் தருவது மாநில அரசு, உதவித்தொகை – ஊக்கத்தொகை - கல்விக் கட்டணச் சலுகை என மாணவர்களுக்கு அனைத்துச் செலவுகளையும் செய்வது நாங்கள். 

mk stalin

இவ்வளவையும் நாங்கள் செய்ய, எம் பல்கலைக்கழங்களுக்கு வேந்தராக இருந்து நிர்வகிப்பதோ எங்கிருந்தோ வந்த ஆளுநர். இதையெல்லாம் மிஞ்சும் கொடுமையாக, துணைவேந்தரையும் ஒன்றிய அரசால் அனுப்பப்பட்ட ஆளுநரே நியமிக்கலாம் என்று UGC தன் விதிகளைத் திருத்துமானால் என்னவாகும் உயர்கல்வியின் நிலை? 

தமிழ்நாடு உயர்கல்வியில் முதலிடத்தில் இருப்பதைக் காணப் பொறுக்காத வயிற்றெரிச்சலில் நம்மைக் கீழே தள்ளும் அப்பட்டமான முயற்சிதான் UGC Draft Regulations. இதனை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். தமிழர்களின் ஒன்றுபட்ட குரலுக்கு ஒன்றிய அரசு செவிசாய்க்காவிட்டால், மக்கள் மன்றத்தையும் நீதிமன்றத்தையும் நாடுவோம்! வெல்வோம்" என தெரிவித்துள்ளார்.