பாஜகவின் ஈகோவை திருப்திப்படுத்தவே ஒரே நாடு ஒரே தேர்தல் - ஸ்டாலின் கண்டனம்

M K Stalin BJP India Election
By Karthikraja Sep 19, 2024 09:30 AM GMT
Report

ஒரு கட்சியின் பேராசைக்காக இந்தியா ஜனநாயகத்தை வளைக்க முடியாது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஒரே நாடு ஒரே தேர்தல்

பாரளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே கட்டத்தில் தேர்தலை நடத்தும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை, 2014 பாராளுமன்ற தேர்தல் முதல் பாஜக முன் மொழிந்து வருகிறது. 

one nation one election

இது தொடர்பாக ஆராய முன்னாள் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான 18,000 பக்க அறிக்கையை கடந்த மார்ச் மாதம் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் இந்த குழு அளித்தது. 

ஒரே நாடு ஒரே தேர்தல் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஒரே நாடு ஒரே தேர்தல் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஸ்டாலின் எதிர்ப்பு

இந்நிலையில் நேற்று இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டம் நடைமுறைக்கு சாத்தியமில்லை என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

mkstalin oppose one nation one election

இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ’’இந்தியாவின் பன்மைத்துவ தேர்தல் முறையின் சிக்கல்களைப் புறக்கணித்து, கூட்டாட்சித் தன்மையைக் குறை மதிப்பிற்கு உட்படுத்தும் ஒரு நடைமுறைச் சாத்தியமற்ற கருத்தாகும். தேர்தல் நிகழ்வுகள், பிராந்திய பிரச்சினைகள் மற்றும் அரசு நிர்வாக முன்னுரிமைகள் ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகளைக் கருத்தில் கொண்டால், இது சாத்தியமற்ற ஒன்று. இது ஆட்சியின் இயல்பான போக்கை சீர்குலைத்துவிடும்.

பாஜகவின் ஈகோ

இந்த பரிந்துரை முழுவதும் பாஜகவின் ஈகோவை திருப்திப்படுத்தும் நடவடிக்கைதான், ஆனால் அவர்களால் அதை ஒருபோதும் செயல்படுத்த முடியாது. ஒரு கட்சியின் பேராசைக்கு ஏற்ப இந்தியாவின் ஜனநாயகத்தை வளைக்க முடியாது. 

இந்த திசைதிருப்பல் தந்திரங்களில் சக்தியை வீணாக்காமல், வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு மற்றும் மாநிலங்களுக்கு வளங்களை சமமாக பகிர்ந்தளித்தல் போன்ற பிரச்சினைகளை தீர்ப்பதில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்." என தெரிவித்துள்ளார்.