G20 டின்னர்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

M K Stalin Tamil nadu Delhi
By Vinothini Sep 10, 2023 04:42 AM GMT
Report

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க அதிபரை சந்தித்த புகைபடம் வைரலாகி வருகிறது.

G20 மாநாடு

டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாரத் மண்டபத்தில் நேற்றும், இன்றும் 18வது ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உலக தலைவர்கள் பலர் டெல்லியில் குவிந்துள்ளனர். ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர்.

mk-stalin-met-joe-biden

மாநாட்டில் கலந்துகொள்ள வருகை தந்த சர்வதேச தலைவர்களுக்குப் புகழ்பெற்ற கோனார்க் சக்கரம் பின்னணியில் இருக்கும்படி சிவப்புக் கம்பளத்தில் நின்று பிரதமர் மோடி உற்சாக வரவேற்பு அளித்தார்.

இந்த மாநாட்டில் நாட்டின் பெயரைக் குறிக்க பிரதமர் மோடியின் முன்பாக வைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகையில் இந்தியா என்பதற்குப் பதிலாக ‘பாரத்’ என இடம்பெற்றது.

முதலமைச்சர் சந்திப்பு

இந்நிலையில், நேற்று இரவு, உலக தலைவர்களுக்கு டெல்லியில் குடியரசுத் தலைவர் விருந்தளித்தார். இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியாவில் உள்ள மாநில முதல்வர்கள், மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன் பேரில் தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்றிருந்தார்.

அப்போது நேற்று இரவு நடந்த விருந்தில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலினை, பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது இருவரும் கைகுலுக்கிக்கொண்ட புகைப்படத்தை முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.