ஒடிசா ரயில் விபத்து – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அவசர ஆலோசனை
ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை நடத்த உள்ளார்.
ஒடிசா விபத்து
ஒடிசா ரயில் விபத்து நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த கோர விபத்தில் சிக்கி 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தயுள்ள நிலையில், 800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுள்ளனர். ஒடிசாவில் ரயில் விபத்து காரணமாக, தமிழ்நாட்டில் இன்று ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், தமிழர்களை மீட்கும் பணியில் தமிழக அரசு துரிதமாக ஈடுபட்டு வருகிறது.
முதலமைச்சர் ஆலோசனை
இந்த நிலையில், ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அரசுத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர. ரயில் விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்பது, விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் மற்றும் மருத்துவ உதவிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது.