டெஸ்லா; எலான் மஸ்கை சந்தித்த மு.க ஸ்டாலின்? வைரலாகும் இயக்குனர் வெங்கட் பிரபு போஸ்ட் !
கோட் திரைப்பட இயக்குனர் வெங்கட் பிரபுவின் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வைரல் போஸ்ட்
அமெரிக்காவின் பிரபல நிறுவனமான டெஸ்லா நிறுவனம் விரைவில் தமிழகத்தில் அல்லது குஜராத்தில் அடியெடுத்து வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியது. ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வில்லை.
அப்படி தமிழகத்தில் அமைக்கப்பட்டால் திருச்சியில் அமைக்க வேண்டும் என்று திருச்சி மாவட்ட மக்கள் அனைவரும் கோரிக்கை விடுத்து வந்தனர். திருச்சியில் அமைத்தால் தமிழகத்தின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் என்றும் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் முகஸ்டாலின் வெளிநாட்டின் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்காவுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளார். அங்கு முகஸ்டாலின் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆகியோரை நேரில் சந்திக்க திட்டமிட்டிருந்தார்.
வெங்கட் பிரபு
பல்வேறு நிறுவனத்தின் முதலீடுகள் தமிழகத்தில் குவிந்து வருகிறது. இது தொடர்பாக பல்வேறு நிறுவனங்களின் அதிகாரிகளுடன் நேரில் சந்தித்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகிறது. இந்த சூழலில், கோட் திரைப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு ஒரு புகைப்படத்தை தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், தமிழக முதலமைச்சர் முகஸ்டாலினுடன் டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் உடன் இருப்பது போன்ற ஏஐ தொழில்நுட்பத்தில் உள்ள புகைப்படம் உள்ளது. மேலும் அந்த பதிவில், இந்த ஏஐ புகைப்படம் உண்மையானால் எப்படி இருக்கும்?
அவ்வாறு டெஸ்லா நிறுவனம் தமிழகத்திற்கு வந்தால் அது ஒரு கோட் மூவ் சி எம் சார் என்று பதிவிட்டுள்ளார். இதனுடன் டிஆர்பி ராஜா மற்றும் உதயநிதி ஸ்டாலினையும் டேக் செய்துள்ளார்.முகஸ்டாலினின் அமெரிக்கா பயணத்தில் டெஸ்லா நிறுவனத்துடன் சந்திப்பு தொடர்பான எந்த ஒரு தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.