மீண்டும் வெளிநாடு பயணம் புறப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின் - சட்டப்பேரவையில் அமைச்சர் டிஆர்பி ராஜா!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தமிழக தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை கூட்டத்தொடர்
நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்து திமுக 40/40 வெற்றியை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது தமிழக சட்டப்பேரவை கூடியுள்ளது. கள்ளச்சாராய விவகாரம் தமிழக சட்டப்பேரவையில் கடும் சலசலப்புகளை உண்டாக்கி வருகின்றது.
தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக உறுப்பினர்கள் இந்த கூட்டத்தொடர் முடிவடையும் வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள். இந்த சூழலில் தான், இன்று சட்டப்பேரவையில் உரையாற்றிய தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா பேசியது வருமாறு,
வெளிநாடு
கடந்த 3 ஆண்டுகளில் 10 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு தமிழ்நாட்டிற்கு முதலீடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதற்கு முக்கிய காரணம் உலக முதலீட்டாளர் மாநாடு தான் காரணம். 30'க்கும் நாடுகளில் இருந்து 1000'க்கும் அதிகப்படியான உலக முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொண்டு 9 பங்குதாரர் நாடுகளும் கலந்துக்கொண்டது.
கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 6,64,101 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. 631 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. அதில் 379 ஒப்பந்தங்கள் ஆரம்ப கட்டத்தில் உள்ளன. மீண்டும் ஸ்டாலின் வெளிநாடு பயணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்க விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளார்.
அதிக தொழிற்சாலை இருக்கும் மாநிலமாக இந்திய அளவில் தமிழகம் உள்ளது. ஒரு ஆண்டிற்கு 10 லட்சம் என்ற விகிதத்தில் 3 ஆண்டுகளில் 31 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி சாதனை படைத்துள்ளார் முதலமைச்சர்.