கள்ளச்சாராயம் காச்சுபவர்களுக்கு தான் விடியல் - ஹெச் ராஜா விமர்சனம்

Tamil nadu BJP H Raja Chief Minister of Tamil Nadu
By Karthick Jun 27, 2024 04:23 PM GMT
Report

கள்ளச்சாராய விவகாரம் தமிழக சட்டமன்றத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது. தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்ட நிலையில், இந்த கூட்டத்தொடர் முடியும் வரை அவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளார் சபாநாயகர் அப்பாவு.

பாஜக ஆட்சிக்கு வந்தால்...காவியில் தான் காவல்துறையினர் Uniform..ஹெச் ராஜா அதிரடி!!

பாஜக ஆட்சிக்கு வந்தால்...காவியில் தான் காவல்துறையினர் Uniform..ஹெச் ராஜா அதிரடி!!

அதே நேரத்தில் இன்று அதிமுகவினர் இது தொடர்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், பாஜகவின் மூத்த நிர்வாகி ஹெச்.ராஜா இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியது வருமாறு, எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெறிப்பது போல சபாநாயகர் அவர்கள் நடந்து கொள்வது, ஜனநாயக மரபு படிகளுக்கு எதிரானது. சட்டமன்றத்தில் ஓடி ஒளிய மாட்டேன் என கூறும் முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்கட்சிகளை வெளியே அனுப்பிவிட்டு தற்போது சட்டமன்றத்தில் ஒளிந்து கொண்டுள்ளார்.

h raja slams tn cm stalin in kallakuriichi issue

மறைக்கவேண்டும் என்ற தீய நோக்கம் தெரிகிறது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மடியில் கனமில்லை என்றால், வழியில் பயமில்லை. தமிழக முதல்வர் ஸ்டாலினோ அல்லது அமைச்சர் முனுசாமியோ சொல்லாமல் கலெக்டர் அப்படி பேசியிருக்கமாட்டார்.

MK stalin silent

கைதானவர் வீட்டில் ஸ்டாலின் படம் ஒட்டியுள்ளது. கள்ளச்சாராயம் காச்சுபவர்களுக்கு விடியல் தருவாரு வந்திருக்காரு'னு தான அர்த்தம்.சபாநாயகர் முறையா நடந்து கொள்ளணும். மிக மோசமாக மாநில அரசின் அடிமையாக காவல் துறை நடக்கிறது. ஆளும் கட்சியின் கைக்கூலியாக நடக்கிறது காவல்துறை. இது வன்மையை கண்டிக்கத்தக்கது