பாஜக ஆட்சிக்கு வந்தால்...காவியில் தான் காவல்துறையினர் Uniform..ஹெச் ராஜா அதிரடி!!
தமிழகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா, திராவிட இயக்கங்களே இல்லாமல் அழிக்கப்படும் என கூறினார்.
பாஜகவினர் போராட்டம்
சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்களையும், அதில் தமிழக இந்து அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு கலந்து கொண்டதற்கும் பாஜகவினர் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
சேகர் பாபு பதவி விலக வேண்டும் என்று பாஜகவினர் கேடு வைத்து நேற்று சென்னை வள்ளுவர் கோட்டம் உட்பட பல இடங்களில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் உட்பட 800 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவி தான் uniform
இந்நிலையில், அமைச்சர் உதயநிதியைக் கண்டித்து திருச்சி திருவானைக்காவல் பகுதியில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தலைமையில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், நிச்சயமாக தமிழகத்தில் திராவிட கட்சிகள் முழுமையாக ஒழிக்கப்பட்டு பாஜக தலைமையில் ஆட்சி அமையப்பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். அவ்வாறு ஆட்சி அமையப்பெற்றால் காவல் துறையினரின் uniform கூட காவி நிறத்திற்கு மாற்றப்படலாம் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.