உடனடி நடவடிக்கை வேண்டும் - மீனவர்களை மீட்க முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

Indian fishermen M K Stalin Dr. S. Jaishankar
By Karthikraja Jun 20, 2024 01:46 AM GMT
Report

 இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக மீனவர்கள் கைது

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது அடிக்கடி நடந்து கொண்டுள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென்று மீனவர்கள் நெடுங்காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். 

pudhukottai fisherman arrest by srilanka navy

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நாளை (ஜூன் 20) இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளார். இந்த பயணத்தின் போது இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து பேச உள்ளார். இத்தகைய சூழலில் இவருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

"தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு ஒரே தீர்வு கட்சத் தீவு மீட்புதான்" - கி.வீரமணி

"தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு ஒரே தீர்வு கட்சத் தீவு மீட்புதான்" - கி.வீரமணி

மு.க.ஸ்டாலின்

அந்த கடிதத்தில், இலங்கைக் கடற்படையினரால் நேற்று (18-6-2024) கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு மீனவர்களை உடனடியாக விடுவிக்க ஒன்றிய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். 

mk stalin write letter for tamil fisherman

அக்கடிதத்தில் புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து IND-TN-08-MM-05 என்ற பதிவு எண் கொண்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் 18-6-2024 அன்று கைது செய்யப்பட்டு, அவர்களது மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். இத்தகைய சம்பவங்கள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதோடு மட்டுமல்லாமல், மீனவ சமுதாயத்தினரிடையே அச்ச உணர்வையும், நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்துவதாகவும் கவலைபடத் தெரிவித்துள்ள முதலமைச்சர், இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் தற்போது 15 மீனவர்களும், 162 மீன்பிடிப் படகுகளும் உள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய தூதரக நடவடிக்கைகள் மூலம் இலங்கை அரசை வலியுறுத்திட வேண்டுமென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார். இவ்வாறு முதல்வர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.