நாளை முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளது - சஸ்பென்ஸ் வைக்கும் முதல்வர் ஸ்டாலின்

M K Stalin Thangam Thennarasu X
By Karthikraja Jan 22, 2025 07:30 PM GMT
Report

நாளை முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மு.க.ஸ்டாலின்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் பக்கத்தில், "நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது என பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

mk stalin important announcement

மேலும், இந்த பதிவில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் பதிவு ஒன்றை பகிர்ந்து, வாய்ப்புள்ளோர் வருகை தாருங்கள் மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

இருட்டில் அமர்ந்து அமாவாசையை எண்ணுகிறார் பழனிசாமி - முதல்வர் மு.க.ஸ்டாலின்

இருட்டில் அமர்ந்து அமாவாசையை எண்ணுகிறார் பழனிசாமி - முதல்வர் மு.க.ஸ்டாலின்

முக்கிய அறிவிப்பு

அமைச்சர் தங்கம் தென்னரசு பதிவில், நாளை(23.01.2025) காலை 10 மணி அளவில் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் முதலவர் ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்வு குறித்த அழைப்பிதழ் உள்ளது. 

இந்த நிகழ்வில், 'இரும்பின் தொன்மை' எனும் நூலை வெளியிட்டு கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், கீழடி இணையதளத்தை தொடங்கி வைக்கிறார்.

இது என்ன விதமான அறிவிப்பாக இருக்கும் என தமிழ்நாட்டு மக்களிடையே பலத்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.