ஓபன் டென்னிஸ் - 2மணி நேரத்திற்கும் மேல் மைதானத்தில் முதலமைச்சர்!

M K Stalin Tennis Tamil nadu Chennai
By Sumathi Sep 19, 2022 07:26 AM GMT
Report

டென்னிஸ் போட்டியின் இறுதி சுற்றை 2மணி நேரத்திற்கும் மேலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டு ரசித்தார்.

 மகளிர் ஓபன் டென்னிஸ்

சென்னை, நுங்கம்பாக்கத்தில் மகளிர் ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டி இன்று நடைப்பெற்றது. இதில் பார்வையாளராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அவருடன் எம்.பி., கனிமொழி, ஆ. ராசா, தயாநிதி மாறன், அமைச்சர் மெய்ய நாதன், அமைச்சர் கே.என்.நேருவும் உடனிருந்தனர்.

ஓபன் டென்னிஸ் - 2மணி நேரத்திற்கும் மேல் மைதானத்தில் முதலமைச்சர்! | Mk Stalin Gave Award Linda Fruhvirtova

சென்னை ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் செக்குடியரசு வீராங்கனை லிண்டா ஃபருஹ்விர்டோவா, போலந்து வீராங்கனை மேக்னா லினெட் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.

இரட்டையர் பிரிவில் கனடா மற்றும் பிரேசிலினின் கேப்ரியல்லா டாப், லுசா ஸ்டெபானி, ரஷ்யாவின் ஆனா லின்கோவா, ஜார்ஜியாவின் நடிலா ஜலாமிட்ஸ் ஜோடிகள் மோதின.

லிண்டா வெற்றி

இந்த நிலையில், சென்னை ஓபன் மகளிர் தொடரின் ஒற்றையர் பிரிவில், போலந்து வீராங்கனை மக்தா லினெட்-ஐ 2-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, செக் குடியரசு வீராங்கனை லிண்டா சாம்பியன் பட்டத்தை வென்றார்.

ஓபன் டென்னிஸ் - 2மணி நேரத்திற்கும் மேல் மைதானத்தில் முதலமைச்சர்! | Mk Stalin Gave Award Linda Fruhvirtova

முதல் செட்டை மக்தா லினெட் 6-4 என்ற கணக்கில் வென்று முன்னிலை பெற்றார். ஆனால், இரண்டாவது செட்டை 6-3 என்ற கணக்கில் லிண்டா கைப்பற்றினார். இதனால், போட்டி மூன்றாவது செட்டை நோக்கி நகர்ந்தது.

மூன்றாவது செட்டின் தொடக்கத்தில் லினெட் ஆதிக்கம் செலுத்தினாலும், லிண்டா, ஒரே மூச்சில் 6-4 என்ற கணக்கில் மூன்றாவது செட்டை வென்றார்.இதையடுத்து முதல் பரிசுக்கான கோப்பையை லிண்டாவிற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். பரிசுத் தொகையை அமைச்சர் வழங்கினார்.