நிதி ஆயோக் கூட்டம்; பங்கேற்காதது ஏன் ? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன் என மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
நிதி ஆயோக் கூட்டம்
பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த ஆண்டின் பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்காததை கண்டித்து இந்தியா கூட்டணி ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்புக்கு முன்பே தமிழக முதலமைச்ச்சர் ஸ்டாலின், நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க போவது இல்லை என்று அறிவித்தார்.
மத்திய அரசை ஏன் ஒன்றிய அரசு என்று அழைக்கிறீர்கள்? நயினார் நாகேந்திரன் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!
ஸ்டாலின் விளக்கம்
அந்த கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், கூட்டத்தை புறக்கணிப்பது ஏன் என்று ஸ்டாலின் வீடியோ வாயிலாக விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, இந்தியா கூட்டணிக்கு வாக்களித்த மக்களை பழிவாங்குவதற்காகவே பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை பாஜக அரசு புறக்கணித்து வருகிறது. அரசு என்பது வாக்களிக்காத மக்களுக்காகவும் செயல்பட வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை பல்வேறு மாநில மக்கள் புறக்கணித்தனர். பாஜகவை புறக்கணித்த மக்களை பழிவாங்கும் பட்ஜெட் தான் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் தவறு செய்தால் தோல்வியை சந்திப்பீர்கள். என்று தெரிவித்துள்ளார்.