அப்போது தான் பெண்களுக்கு ரூ.1000 - முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை!

M K Stalin Tamil nadu Government of Tamil Nadu
By Sumathi Mar 14, 2023 05:08 AM GMT
Report

பெண்களுக்கு ஆயிரம் உரிமைத் தொகை வழங்குவது குறித்து முதலமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

ரூ.1000 திட்டம்

சென்னை தலைமை செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டடத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமை செயலாளர் இறையன்பு, துறை சார்ந்த செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

அப்போது தான் பெண்களுக்கு ரூ.1000 - முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை! | Mk Stalin Discussion 1000 Monthly Aid Women

அதில், 68 திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் 6 எதிர்கால திட்டங்கள் குறித்தும், சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் செயல்பாடுகள், குடும்ப தலைவிக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை உள்ளிட்ட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட உள்ள புதிய திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

முதலமைச்சர் ஆலோசனை

மேலும், எரிசக்தி துறை, நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள், போக்குவரத்து, பொதுப்பணி, தொழில் முதலீடு, கைத்தறி மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட துறை சார்ந்த விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வரும் ஜூன் மாதம் ரூபாய் ஆயிரம் திட்டம் தொடங்கப்படவுள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.