கருப்பு சிவப்பு கட்டிய கொள்கையாளர் - எழுத்தாளர் இமையத்துக்கு முதலமைச்சர் வாழ்த்து!

M K Stalin Tamil nadu
By Sumathi Nov 25, 2022 05:28 AM GMT
Report

விருது பெறும் எழுத்தாளர் இமையத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் இமையம்

திட்டக்குடியைச் சேர்ந்தவர் எழுத்தாளர் இமையம். இவர் இயற்பெயர் அண்ணாமலை. 2020 ஆம் ஆண்டில் செல்லாத பணம் என்ற படைப்பில் இவர் சாகித்திய அகாடமி விருது பெற்றிருக்கிறார்.

கருப்பு சிவப்பு கட்டிய கொள்கையாளர் - எழுத்தாளர் இமையத்துக்கு முதலமைச்சர் வாழ்த்து! | Mk Stalin Congratulates Writer Imayan For Award

கன்னட தேசிய குவெம்பு ராஷ்டிரிய புராஸ்கர் விருது 2022க்கு எழுத்தாளர் இமையம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இந்த விருதை பெறும் முதல் எழுத்தாளர் இவர். இதில் வெள்ளிப்பதக்கமும், 5 லட்சம் பணமும் அடங்கும்.

இந்நிலையில், இவருக்கு கருப்பு சிவப்பு கட்டிய கொள்கையாளர் - எழுத்தாளர் இமையம் அவர்களுக்கு 'குவெம்பு ராஷ்ட்ரிய புரஸ்கார்' விருது அறிவிக்கப்படிருப்பதை அறிந்து மகிழ்ச்சியுற்றேன். திராவிட இயக்கத்தின் ஆற்றல்மிகு எழுத்தாளர்களின் தொடர்ச்சியான இமையம் நடைபோடும் பாதையில் புகழ்மாலைகள் பல குவியட்டும்! என தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.