அவர் ஸ்டார்..அதனால் துறையும் ஸ்டார்!! உதயநிதி ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய முதல்வர்!
தமிழக விளையாட்டு துறை ஸ்டார் துறையாக வளர்ந்துள்ளது என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
மகிழ்ச்சியாக உள்ளது
ஆசிய விளையாட்டு போட்டி 2023ல் வெற்றிப் பெற்ற தமிழக வீரர்- வீராங்கனைகளுக்கு ரொக்க பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
தமிழக விளையாட்டு வீரர்கள் அதிக அளவில் பரிசுகளை வென்றிருப்பது மகிழ்ச்சியை அளிப்பதாக கூறிய முதல்வர், ஒவ்வொரு ஊராட்சியிலும் உள்ள கிராமங்களில் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது என்றார்.
விளையாட்டு மீதான ஆர்வத்தை அனைத்து மாணவ,மாணவிகளுக்கும் ஏற்படுத்த அமைச்சர் மற்றும் அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறேன் என வேண்டுகோள் விடுத்த முதல்வர் முக ஸ்டாலின், படிக்கும் காலத்தில் மாணவர்கள் ஏதாவது ஒரு விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவை விரிவு செய் என்பது போல் உடலை உறுதி செய்என்பது நமது முன்னெடுப்பாக இருக்க வேண்டும் என் கூறினார்.
அவர் ஸ்டார்
தமிழக அரசு அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்தி வருவதாக கூறிய அவர், விளையாட்டு துறை அமைச்சர்கள் அதிகாரிகளுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்து கொண்டார். விளையாட்டு துறை அமைச்சர் ஸ்டாராக இருப்பதால் விளையாட்டு துறையும் ஸ்டார் துறை ஆக வளர்ந்து விட்டது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பாராட்டி பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் அளிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என குறிப்பிட்டு, கடந்த இரண்டரை ஆண்டுகளில் விளையாட்டுத்துறை பல சாதனைகள செய்துள்ளது என சுட்டிக்காட்டி, பதக்கம்வென்ற வீரர் வீராங்கனைகளை பார்த்து பல புதிய வீரர்கள் உருவாக வாய்ப்பு உள்ளது என்றும் அவர்களுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்து கொண்டார்.