லேட்டரல் என்ட்ரி முறை சமூகநீதிக்கு எதிரானது- முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
மத்திய அமைச்சகங்களில் காலியாக உள்ள உயா்பதவிகளில் நேரடி நியமனங்கள் மூலம் SC, ST, OBC மற்றும் சிறுபான்மை அலுவலர்களுக்கான வாய்ப்புகளை பறிக்கிறது.
லேட்டரல் என்ட்ரி
மத்திய அமைச்சகங்களில் காலியாக உள்ள உயா்பதவிகளில் ஐஏஎஸ் அதிகாரிகளுக்குப் பதில் தனியாா் துறைகளைச் சோ்ந்த வல்லுநா்களை நேரடி நியமனம் (லேட்டரல் என்ட்ரி) மோடி தலைமையிலான மத்திய அரசுசெய்து வருகிறது.
அண்மையில் யுபிஎஸ்சி ஓர் அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அதில், இணைச் செயலாளர், இயக்குநர், துணைச் செயலாளர் என மத்திய அரசின் 24 அமைச்சகங்களில் 45 மூத்த அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி இருந்தது.
யுபிஎஸ்சி
இந்த பணியிடங்கள் அனைத்தும் முடிவெடுக்கும் நிலையில் உள்ள தலைமை பொறுப்பாகும். எனினும் இது லேட்டரல் என்ட்ரி முறையிலான பணி என்பதால் இட ஒதுக்கீடு எதுவும் பின்பற்றப்படாது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் மத்திய அரசின் உயர்பதவிகளில் நேரடி நியமனங்கள், சமூக நீதி மீதான நேரடி தாக்குதல் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு: சமூகநீதியை நிலைநாட்ட இடஒதுக்கீடு அமல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.
முதல்வர் .ஸ்டாலின்
மேலும் நேரடி நியமனம் என்பது SC, ST, OBC மற்றும் சிறுபான்மை அலுவலர்களுக்கான வாய்ப்புகளை பறிக்கிறது.நாங்கள் எப்போதும் எதிர்க்கும் கிரீமி லேயரை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
எல்லாவற்றிற்கும் மேலாக, வரலாற்று ரீதியாக உரிமை மறுக்கப்பட்ட நமது சமூகத்தின் அனைத்து பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கும் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் நியாயமான முறையில் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்ய நாடு தழுவிய ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.