செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது - முதலமைச்சர் கண்டனம்!

M K Stalin Narendra Modi
By Vinothini May 29, 2023 08:30 PM GMT
Report

நேற்று புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்ட நிலையில், முதலமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

செங்கோல்

டெல்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் சவார்க்கர் பிறந்தநாளன்று நேற்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது.

mk-stalin-condemns-and-says-about-the-scepter

இதனை சிறப்பிப்பதற்காக நேற்று தமிழகத்திலிருந்து சென்ற ஆதீனங்களிடம் பிரதமர் மோடி ஆசி பெற்றதோடு செங்கோலையும் பெற்றுக் கொண்டார்.

அதன்பிறகு புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டது. அதே சமயம் பாஜக எம்.பி பாலியல் தொல்லை அளித்ததாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வந்தனர்.

அவர்கள் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். அப்பொழுது போலீசார் அவர்களை தடுத்து கைது செய்தனர்.இதற்கு பல கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

கண்டனம்

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் ''டெல்லியில் போராட்டம் நடத்திய மல்யுத்த வீராங்கனைகளை கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது.

பாஜக எம்பி மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் கூறி பல மாதங்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

செங்கோல் முதல் நாளே வளைந்து விட்டது என்பதையே இச்சம்பவம் காண்பிக்கிறது'' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.