தமிழ்நாடு அமைதியாக இருக்காது - மத்திய அரசுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை

M K Stalin Tamil nadu BJP Governor of Tamil Nadu University Grants Commission
By Karthikraja Jan 07, 2025 02:00 PM GMT
Report

யுஜிசியின் புதிய விதிமுறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

துணைவேந்தர் நியமனம்

பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் நியமிப்பது தொடர்பான விதிகளில் திருத்தம் செய்து புதிய வரவை வெளியிட்டுள்ளது பல்கலைக்கழக மானிய குழு

university grants commission

பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் செய்வதற்காக தேடுதல் குழு அமைக்கப்படும். இந்த தேடுதல் குழுவில் ஆளுநர் ஒருவரையும், பல்கலைக்கழகம் சார்பாக ஒருவர் மற்றும் மாநில அரசு சார்பாக ஒருவர் என மூவர் இருப்பர். 

ஆண்டுக்கு இரு முறை மாணவர் சேர்க்கை - UGC அறிமுகப்படுத்தும் முக்கிய மாற்றங்கள்

ஆண்டுக்கு இரு முறை மாணவர் சேர்க்கை - UGC அறிமுகப்படுத்தும் முக்கிய மாற்றங்கள்

ஆளுநருக்கு அதிகாரம்

இந்த புதிய நெறிமுறைப்படி துணைவேந்தர் நியமனத்திற்கான தேடுதல் குழுவில் ஆளுநர் ஒருவரையும், யுஜிசி தலைவர் ஒருவரையும், பல்கலைக்கழகம் ஒருவரையும் நியமனம் செய்வர் என கூறப்பட்டுள்ளது. மேலும், கல்வியாளர்கள் அல்லாதவர்களையும் இந்தப் பதவிகளில் நியமிக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 

mk stalin

இந்நிலையில் இந்த முடிவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “'பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநர்களுக்கு அதிக அதிகாரம் வழங்குவது மற்றும் கல்வியாளர்கள் அல்லாதவர்கள் இந்தப் பதவிகளை வகிக்க அனுமதிப்பது உள்ளிட்ட யுஜிசியின் புதிய விதிமுறைகள், கூட்டாட்சி மற்றும் மாநில உரிமைகள் மீதான நேரடித் தாக்குதலாகும்.

முதல்வர் கண்டனம்

மத்திய பா.ஜ.க அரசின் இந்த எதேச்சதிகார நடவடிக்கை, அதிகாரத்தை மையப்படுத்தவும், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் மதிப்பைக் குறைக்கவும் முற்படுகிறது. கல்வி என்பது, பாஜக அரசின் கட்டளைப்படி செயல்படும் ஆளுநர்கள் வசம் இல்லாமல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் கைகளில் இருக்க வேண்டும். 

அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களுடன் நாட்டிலேயே முன்னிலையில் இருக்கிறது தமிழ்நாடு. அப்படியிருக்க, நமது நிறுவனங்களின் சுயாட்சி பறிக்கப்பட்டால் அமைதியாக இருக்க மாட்டோம். 

அரசியலமைப்பு சட்டப்படி கல்வி ஒருங்கிணைந்த பட்டியலின் கீழ் உள்ளது. எனவே, யு.ஜி.சி ஒருதலைப்பட்சமாக இந்த அறிவிப்பை வெளியிடுவது அரசியலமைப்புக்கு எதிரானது. இந்த அத்துமீறலை ஏற்க முடியாது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் போராடும்' என தெரிவித்துள்ளார்.