ஆண்டுக்கு இரு முறை மாணவர் சேர்க்கை - UGC அறிமுகப்படுத்தும் முக்கிய மாற்றங்கள்

India Education University Grants Commission
By Karthikraja Dec 05, 2024 05:30 PM GMT
Report

உயர்கல்வி துறையில் வர உள்ள பல்வேறு மாற்றங்கள் குறித்த வரைவு அறிக்கையை யுஜிசி வெளியிட்டுள்ளது.

யுஜிசி

இந்தியாவில் உயர் கல்வியினை மேற்பார்வையிடவும், தரக்கட்டுப்பாடு செய்யவும் உருவாக்கப்பட்ட அமைப்பு பல்கலைக்கழக மானியக் குழு(UGC) ஆகும். 

ugc new regulations

இந்நிலையில் புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் உயர்கல்வி துறையில் வர உள்ள பல்வேறு மாற்றங்கள் குறித்த வரைவு அறிக்கையை பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) வெளியிட்டுள்ளது.

இருமுறை மாணவர் சேர்க்கை

இதன் படி இனி ஆண்டுக்கு இரு முறை ஜூலை/ஆகஸ்ட் மாதங்களில் மற்றும் ஜனவரி / பிப்ரவரி மாதங்களில் உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடத்திக்கொள்ளலாம். இந்த நடைமுறை மாணவர்களுக்கான காத்திருப்பு காலத்தை குறைப்பதோடு, அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்கி, உலகளாவிய கல்வி நடைமுறைகளுடன் ஒத்துப்போகிறது. 

ugc new admission policy

பட்டப்படிப்பில் பயிலும் போது எந்த ஆண்டில் வேண்டுமானாலும் சேரலாம், அதேபோல் எந்த ஆண்டில் வேண்டுமானாலும் அதிலிருந்து வெளியேறி வேறு படிப்பில் சேர்வதற்கான 'multiple entry and exit' முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் ஒரே நேரத்தில் 2 இளங்கலை(UG) அல்லது 2 முதுகலை(PG) படிப்பை படிக்க முடியும்.

குறைந்தபட்ச வருகைத் தேவை

12ஆம் வகுப்பில் எந்தப் பிரிவில் படித்திருந்தாலும், விரும்பிய இளங்கலை அல்லது முதுகலை படிப்பை தேர்வு செய்து படிக்கலாம். இதற்கு தேசிய அளவிலான மற்றும் பல்கலைக்கழகம் நடத்தக்கூடிய குறிப்பிட்ட நுழைவுத் தேர்வில் வெற்றி பெற வேண்டும். 

minimum attendance

அதே போல் இளநிலை மற்றும் முதுகலை படிப்புகளை ஓராண்டுக்கு முன்னதாகவே அல்லது கூடுதலாக ஓராண்டோ படிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. படித்த ஆண்டுகளுக்கு ஏற்ப சான்றிதழ் படிப்பாகவோ, பட்டயமாகவோ, பட்டமாகவோ சான்றிதழ்கள் வழங்கப்படும்.

மேலும், மாணவர்களின் பலதரப்பட்ட கற்றல் வாய்ப்புகளை கருத்தில் கொண்டு, உயர் கல்வி நிறுவனங்கள் தங்கள் தன்னாட்சி அமைப்புகளின் ஒப்புதலை பெற்று வெவ்வேறு திட்டங்களில் மாணவர்களின் குறைந்தபட்ச வருகைத் தேவையை(Minimum Attendance) தீர்மானிக்கலாம்.