குடியரசு தலைவர் தேர்தல் : வாக்களித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

M K Stalin DMK
By Irumporai Jul 18, 2022 05:11 AM GMT
Report

குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்தார் தமிழக முதலமைச்சர் முகஸ்டாலின் வாக்களித்துள்ளார்.

தொடங்கிய தேர்தல்

நாடாளுமன்ற வளாகம், சட்டமன்ற வளாகங்களில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இந்தியாவின் குடியரசுத் தலைவராக பதவி வகித்து வந்த ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகின்ற 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இதனால் புதிய குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்காக தேர்தல் இன்று நடைபெறுகிறது. தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரௌபதி முர்முவும் , எதிர்க்கட்சிகள் சார்பில் யஸ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர்.  

10 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு 

குடியரசுத் தலைவர் தேர்தல் இன்று காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைகிறது. நாடாளுமன்ற வளாகம் மற்றும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளும் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இளஞ்சிவப்பு நிற வாக்கு சீட்டு, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பச்சை நிற வாக்கு சீட்டு அளிக்கப்படும் . தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட பேனாவை பயன்படுத்தி மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கினை பதிவு செய்த முதலமைச்சர்

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை செயலக குழு கூட்ட அரங்கில் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. அந்த வகையில் குடியரசு தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள வாக்கு சாவடியில் முதலமைச்சர் ஸ்டாலின். முதல் ஆளாக தனது வாக்கினை  பதிவு செய்தார்.