மக்களின் அன்புக்கு நன்றி நாளை வீடு திரும்புகிறேன் : முதலமைச்சர் ஸ்டாலின்

M. K. Stalin DMK
By Irumporai Jul 17, 2022 01:52 PM GMT
Report

சென்னை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் மு.க.ஸ்டாலின் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார் தொடர்ந்து காய்ச்சல் மற்றும் உடற்சோர்வு இருந்ததன் காரணமாக அவர் கடந்த 14ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கொரோனா அறிகுறியினால் பரிசோதனை மற்றும் கண்காணிப்புக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. அத்துடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை சீராக உள்ளது.

உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளது. தற்போது அவர் வேகமாக குணமடைந்து வருகிறார். தொடர்ந்து முதல்-அமைச்சருக்கு கொரோனா தொற்றில் இருந்து விடுபடுவதற்கான சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. ஓரிரு நாட்கள் மருத்துவமனையில் தங்கி ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில்,குணமடைந்து விட்டேன் என்ற நல்ல செய்தியுடன், அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. கொரோனா சிகிச்சை முடிந்து நாளை வீடு திரும்ப உள்ளேன்; நலமுடன் பணியை தொடர்வேன். கொரோனா தொற்றில் இருந்து குணமுடைய வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பின் ஆயிரக்கணக்கானோர் என்னை தொடர்பு கொண்டு நலம்பெற வாழ்த்தினர். 'என் பணி மக்கள் தொண்டாற்றுவதே' என்று உறுதியேற்று தொடர்ந்து செயலாற்றி வருகிறேன். கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கும், மக்களுக்கும் கடிதம் எழுதி உள்ளார்.