கடைசி நாள்: வீதி வீதியாக செல்லும் முதலமைச்சர் - அனல் பறக்கும் தேர்தல் களம்
ஈரோடு கிழக்கு தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பரப்புரை மேற்கொள்கிறார்.
இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நாளை மறுநாள் (27ம் தேதி) இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் 3ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன்,
அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
ஸ்டாலின் பரப்புரை
இந்நிலையில், இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்வு பெறவுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
இன்று காலை 9 மணிக்கு சம்பத்நகர், காந்திசிலை மற்றும் பி.பெ.அக்ரஹாரம் ஆகிய இடங்களில் வாக்கு சேகரிக்கும் அவர், மதியம் முனிசிபல் காலனி, பெரியார் நகர் ஆகிய இடங்களில் பரப்புரை மேற்கொள்கிறார்.