மு.க.ஸ்டாலின் எப்போ முருகரா மாறுனாரு? அன்புமணி ராமதாஸ் கேள்வி

Anbumani Ramadoss M K Stalin DMK
By Sumathi Aug 12, 2025 10:55 AM GMT
Report

மு.க.ஸ்டாலின் எப்போது முருகராக மாறினார்? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

முருகன் மாநாட்டு மலர்

பழனி முருகன் கோயில் செல்லும் பக்தர்களிடம் ‘முருகன் மாநாட்டு மலர்’ கட்டாயமாக விற்கப்படுவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

mk stalin - anbumani

இதுகுறுத்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “மு.க.ஸ்டாலின் எப்போது முருகராக மாறினார்? பழனி முருகன் கோயிலில் வழிபாடு நடத்தச் செல்லும் பக்தர்களிடம் முருகப் பெருமான் வரலாறு என்று கூறி,

ரூ.2700 விலை கொண்ட முருகன் மாநாட்டு மலர் கட்டாயமாக விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதைவிடக் கொடுமை என்னவென்றால், முருகன் வரலாறு என்று கூறி விற்பனை செய்யப்படும் நூலின் பெரும்பாலான பக்கங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

என்ன குறை வைத்தேன் அன்புமணிக்கு; கட்சியை பறிக்க சூழ்ச்சி - ராமதாஸ் காட்டம்

என்ன குறை வைத்தேன் அன்புமணிக்கு; கட்சியை பறிக்க சூழ்ச்சி - ராமதாஸ் காட்டம்

அன்புமணி கேள்வி

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோரின் கருத்துகளும், அவர்களின் புகைப்படங்களும் நிறைந்திருப்பது தான்.

மு.க.ஸ்டாலின் எப்போ முருகரா மாறுனாரு? அன்புமணி ராமதாஸ் கேள்வி | Mk Stalin Become Murugar Anbumani Ramadoss

முருகன் வரலாறு என்ற பெயரில் மு.க.ஸ்டாலின் புகழ் பாடப்படுவதைக் காணும் போது மு.க.ஸ்டாலின் எப்போது முருகராக மாறினார்? என்ற வினா எழுவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

அய்யோ பாவம்... திராவிட ஆட்சியாளர்களின் அகராதியில் ‘ஆண்டவர்’களை ஆள்பவர்களே உயர்ந்தவர்கள் என்று எழுதப்பட்டிருப்பது அவர்களுக்கு தெரியாது.” என்று குறிப்பிட்டுள்ளார்.