பெங்களூர் விரையும் மு.க.ஸ்டாலின்; குவியும் தலைவர்கள் - முக்கிய முடிவு!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பெங்களூர் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
எதிர்க்கட்சி கூட்டம்
பிகார் தலைநகர் பாட்னாவில் கடந்த மாதம் 23ஆம் தேதி, எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் நடைபெற்ற நிலையில், இரண்டாவது கூட்டம் காங்கிரஸ் தலைமையில் பெங்களூருவில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.\
அதனைத் தொடர்ந்து, இன்று எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு முதலமைச்சர் சித்தராமையா இரவு விருந்து அளிக்கிறார். நாளை நடைபெறும் கூட்டத்தில் வலுவான எதிர்க் கூட்டணியை அமைப்பதற்கான வியூகங்கள் வகுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்டாலின் பங்கேற்பு
இந்தக் கூட்டத்தில், திமுக சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் சார்பில் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட 24 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதற்காக, சென்னையிலிருந்து இன்று காலை 11.20 மணிக்கு விமானம் மூலம் மு.க.ஸ்டாலின் புறப்படவுள்ளார்.