பிரதமராகும் லட்சியமா...?? முதல் முறை பதிலளித்த முதல்வர் முக ஸ்டாலின்!!
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் வெற்றி மூலம் இந்திய கூட்டணி முதல் ரவுண்ட் வெற்றியை பெற்றுள்ளது என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வர் முக ஸ்டாலின் பேட்டி
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
அதில், பெரும் பொருட்செலவுகளை வைக்கக்கூடிய காலை உணவுத் திட்டம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் ஆகியவற்றில் மாநில அரசுக்கு இருக்கும் சவால்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, இவை அனைத்துமே அன்றாடத் தேவைக்கானத் திட்டமாக மட்டுமின்றி, எதிர்கால வளர்ச்சிக்கான அடித்தளமாகவும் அமைந்துள்ள காரணத்தால், இந்தத் திட்டங்களை நிறைவேற்றுவதில் எத்தகைய சவால்கள் இருந்தாலும் அதனை முழுமையாக நிறைவேற்றித் தருவதில் திராவிட மாடல் அரசு உறுதியாக இருக்கிறது என்று பதிலளித்தார்.
INDIA கூட்டணியின் தற்போதைய நிலை என்ன என்ற கேள்விக்கு, கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலின் வெற்றி மூலம் இந்தியா கூட்டணி முதல் ரவுண்டில் வெற்றி பெற்றுள்ளது என குறிப்பிட்ட அவர், பாஜக'வின் 9 ஆண்டுக்கால ஜனநாயக விரோத, அரசியல் சட்ட விரோத, மக்கள் விரோத ஆட்சியே இந்தியா கூட்டணியை ஒருங்கிணைத்திருக்கிறது என்றார்.
பாஜக'வுடன் இருக்கும் மற்ற நிழல் கூட்டணிகளான 'அமலாக்கத்துறை', 'வருமானவரித்துறை' போன்றவை மேலும் பல கட்சிகளை இந்தியா கூட்டணிக்கு வரவழைக்கும் என நம்பிக்கை தெரிவித்து, அரசியல் சட்டமும் அதன் கொள்கைகளும், மக்களும்தான் தான் எங்கள் கூட்டணியை இயக்கும் விசை என்றார்.
பிரதமராகும் லட்சியமா?
பாஜக- அதிமுக கூட்டணி உண்மையிலேயே முறிந்துவிட்டதா, என்ற கேள்விக்கு பதிலளித்த முதல்வர் முக ஸ்டாலின், உங்களுக்கே கூட்டணி முறிந்து விட்டதா இல்லையா என்ற சந்தேகம் எழுகிறது என்று கூறி, அக்கூட்டணி முறிந்தாலும் - முறியா விட்டாலும் எங்களுக்குக் கவலை இல்லை என்றார்.
முன்னெப்போதும் இல்லாத அளவில் இந்தியிலும் உங்கள் உரை வெளியாகின்றது. பிரதமராகும் லட்சியம் இருக்கிறதா? என கேட்கப்பட்டபோது, தலைவர் கலைஞரின் வழியில், நாட்டின் இன்றையச் சூழலையும், சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியைக் கருத்தில்கொண்டும் இந்தியா கூட்டணியின் செயல்பாட்டில் தி.மு.க தன் பங்களிப்பை விரிவுபடுத்தியுள்ளது என பதிலளித்த முதல்வர், என் உயரம் எனக்குத் தெரியும் என்றவர் தலைவர் கலைஞர் என குறிப்பிட்டு அதே போல மு.க.ஸ்டாலினுக்கும் தன் உயரம் நன்றாகத் தெரியும் என பதிலளித்துள்ளார்.
Sharing my exclusive interview with @ETVBharatTN translated into 13 languages.
— M.K.Stalin (@mkstalin) October 29, 2023
Tamil:https://t.co/FbPFMdSNmq
English:https://t.co/uFY9m9uLDV
Malayalam:https://t.co/pXQdgYkVPj
Telugu:https://t.co/JIDO8FTbSx
Kannada:https://t.co/KbOTl4o2xL
Hindi:… pic.twitter.com/DdtmafB5cx