உடனடியாக குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள்; ஆனால்.. - முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

M K Stalin Tamil nadu Nagapattinam
By Karthikraja Mar 03, 2025 09:34 AM GMT
Report

அனைத்து கட்சிக்கூட்டத்தில் கௌரவம் பார்க்காமல் கலந்து கொள்ள வேண்டுமென முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

மு.க.ஸ்டாலின்

நாகப்பட்டினம் மவாட்டடத்தில் மக்கள் நல திட்ட உதவி வழங்கும் விழா, கலைஞர் சிலை திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாகப்பட்டினம் சென்றுள்ளார். 

mk stalin

இதனிடையே கட்சி நிர்வாகியின் குடும்ப திருமணத்தை நடத்திவைத்த முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து அந்த நிகழ்வில் உரையாடினார். 

கல்லூரி மாணவிகள் குழந்தை பெற்றால் ரூ.81,000 பரிசு - மக்கள் தொகையை அதிகரிக்க புதிய முயற்சி

கல்லூரி மாணவிகள் குழந்தை பெற்றால் ரூ.81,000 பரிசு - மக்கள் தொகையை அதிகரிக்க புதிய முயற்சி

அனைத்து கட்சி கூட்டம்

இதில் பேசிய அவர், "மும்மொழிக்கொள்கையை கட்டாயப்படுத்தி கொண்டு வர ஒன்றிய அரசு திட்டமிட்டு வருகிறது. அதே போல், தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில், தமிழகத்தின் உரிமையை எண்ணிக்கையை குறைக்க முயற்சிக்கிறது.

அதற்காக வரும் மார்ச் 5 ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட உள்ளோம். தமிழகத்தில், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள 40 கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் வருவதாக செய்தி அனுப்பி இருக்கிறார்கள். ஆனால் குறிப்பிட்ட ஒரு சிலர் நாங்கள் வர வாய்ப்பில்லை; வர முடியாது என்று செய்திகளை வெளியிட்டு இருக்கிறார்கள். 

மு.க.ஸ்டாலின்

நான் அவர்களையெல்லாம் கேட்டுக்கொள்ள விரும்புவது வர முடியாது என சொல்பவர்கள் சிந்தித்துப் பார்த்து சொல்லுங்கள். இது தனிப்பட்ட திமுகவிற்கோ தனிப்பட்ட உங்களுக்கோ ஆன பிரச்சனை இல்லை. தனிப்பட்ட கட்சிக்கான பிரச்சனை இல்லை. அரசியலாக பார்க்காதீர்கள். இது தமிழ்நாட்டின் உரிமை.

அழகான தமிழ் பெயர்

மீண்டும் இந்த திருமண விழாவின் மூலமாக எல்லா கட்சித் தலைவர்களுக்கும் கேட்டுக்கொள்ள விரும்புவது வரமுடியாதவர்கள் தயவுசெய்து வரவேண்டும் என அழைப்பு விடுக்கிறேன். இதில் கவுரவம் பார்க்காதீர்கள். இவன் என்ன அழைப்பது நாம் என்ன போவது என நினைக்க வேண்டாம். இது தமிழ்நாட்டின் பிரச்சனை அதை சிந்தித்துப் பார்த்து நீங்கள் வரவேண்டும் என அழைப்பு விடுக்கிறேன்.

முன்பெல்லாம் குழந்தைகளை பெற்றுக்கொள்ள அவசரம் வேண்டாம் என சொல்லி வந்தோம். இப்போது அப்படி சொல்ல வேண்டாம். சொல்லவும் கூடாது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடக்கிறது. மக்கள் தொகை அதிகமாக இருந்தால் தான் எம்பிக்கள் எண்ணிக்கை உயரும் நிலை உள்ளது.

நாம் குடும்பக் கட்டுப்பாட்டில் வெற்றி கண்டோம். அதனால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் அவசரப்பட்டு பெற்றுக்கொள்ளாதீர்கள் என சொல்ல மாட்டேன். உடனடியாக பெற்றுக்கொள்ளுங்கள். ஆனால் பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்டுங்கள் என கூறினார்.