பிறந்தநாள் தேதியை மாற்றியது ஏன்? ஸ்டாலினிடம் காரணத்தை சொன்ன இளையராஜா

Ilayaraaja M K Stalin M Karunanidhi
By Karthikraja Mar 02, 2025 02:00 PM GMT
Report

 கருணாநிதிக்காக தனது பிறந்தநாளை மாற்றிக்கொண்டதாக இளையராஜா தெரிவித்துள்ளார்.

இசைஞானி இளையராஜா

புதிதுபுதிதாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர்கள் அறிமுகமானாலும், பல தசாப்தங்களாக இசைஞானி இளையராஜா தனது ஆதிக்கத்தை தொடர்ந்தே வருகிறார். நூற்றாண்டு கழித்தும் இளையராஜாவின் இசையை மக்கள் கேட்டுக்கொண்டு இருப்பார்கள். 

இளையராஜா ஸ்டாலின் சந்திப்பு

இந்நிலையில் ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனையாக, வரும் மார்ச் 8ஆம் தேதி லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் சிம்பொனி அரங்கேற்றத்தை நிகழ்த்தவுள்ளார். 

பவதாரிணியின் கடைசி ஆசை; உலகம் முழுதும் பரவும் - அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா

பவதாரிணியின் கடைசி ஆசை; உலகம் முழுதும் பரவும் - அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா

முதல்வர் சந்திப்பு

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இசைஞானி இளையராஜாவின் வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது இளையராஜாவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். 

இந்த சந்திப்பின் போது பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு அரசு சார்பாகவும், தலைவர் கலைஞர் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக கூறினார். அதைத்தொடர்ந்து பேசிய இளையராஜா, கலைஞர்தான் எனக்கு இசைஞானி என பெயர் சூட்டினார். அதனை மாற்றவே முடியவில்லை என கூறினார்.

பிறந்தநாள் மாற்றம்

தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், எவ்வளவோ பட்டம் வந்தாலும், இசைஞானியாக எல்லாருடைய இல்லங்களிலும், உள்ளங்களிலும் குடியிருக்கிறீர்கள். உங்களுடைய பிறந்தநாளான ஜூன் 3 ஆம் தேதியை ஜூன் 2 ஆம் தேதிக்கு மாற்றிவிட்டீர்களே என கேட்டார்கள். அதற்கு அப்பாவிற்காகத்தான் என இளையராஜா கூறினார். கருணாநிதியின் பிறந்தநாள் ஜூன் 3 ஆம் தேதி ஆகும்.

எஸ்.பி. பாலசுப்பிரமணியன் பெயரை மகாலிங்கபுர தெருவுக்கு வைத்தோம். அப்போது அவர் பாடிய பாடல்களின் தொகுப்பு கொடுத்தார்கள். அதில் பெரும்பாலும் உங்கள் இசை தான். இப்போது காரில் போகும் அதைத்தான் கேட்கிறேன் என கூறினார்.