ஒரு மாற்றுத்திறனாளி கூட மன வருத்தம் அடையக்கூடாது..அதுவே அரசின் கவனம்!! முக ஸ்டாலின்

M K Stalin Tamil nadu
By Karthick Oct 16, 2023 08:42 AM GMT
Report

சென்னை தலைமை செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியத்தின் கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனை கூட்டம்

தலைமை செயலகத்தில் அமைந்துள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் மாற்றுத்திறனாளி நலத்துறை ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டம், அரசு வேலைவாய்ப்பு மற்றும் 1,763 கோடி ரூபாயில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டம் உள்ளிட்டவை விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

mk-stalin-advices-to-minister-in-handicap-people

அப்போது உரையாற்றிய முதல்வர் முக ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகளின் நலம் பேணும் அரசாக திமுக அரசு விளங்கி வருகிறது என குறிப்பிட்டு, மாற்றுத்திறனாளிகளின் கண்ணியம், தனிப்பட்ட சுதந்திரம் உள்ளிட்டவற்றை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

9 இடங்களில் காங்கிரஸ் போட்டி.!! தமிழக காங்கிரஸ் நம்பிக்கை!! இசையுமா திமுக??

9 இடங்களில் காங்கிரஸ் போட்டி.!! தமிழக காங்கிரஸ் நம்பிக்கை!! இசையுமா திமுக??

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் 

மாற்றுத்திறனாளிகள் நலனில் திமுக அரசு கவனம் செலுத்தி வருகிறது சுட்டிக்காட்டிய அவர், அனைத்து உயிர்களும் ஒன்று என்று கூறி எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் கொள்கை என்றார். ஒரு மாற்றுத்திறனாளி கூட மன வருத்தம் அடையக்கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது என அதிகாரிகளிடம் தெரிவித்த முதல்வர் முக ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகளுக்கு 64 கோடி ரூபாயில் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது என கூறினார்.

mk-stalin-advices-to-minister-in-handicap-people

மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவி தொகை 2000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மகளிர் உதவித் தொகை 1000 ரூபாய் வழங்கப்படுகிறது என குறிப்பிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு 22 சிறப்புப் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது என ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் முதல்வர் தெரிவித்தார்.