சொல்லாததையும் நிறைவேற்றும் ஆட்சிதான் திமுக ஆட்சி - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
வடசென்னையை வளர்ச்சி சென்னையாக மாற்றியுள்ளோம் என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
மு.க.ஸ்டாலின்
சென்னை புளியந்தோப்பில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு ஆணையம் சார்பில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் 712 குடும்பங்களுக்கு வீடு ஒதுக்கீடு ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்த நிகழ்வில் பேசிய அவர், "மத்திய சென்னை, தென் சென்னை எப்படி வளர்ந்து கொண்டிருக்கிறதோ, அதேபோல வடசென்னை பகுதியை மாற்ற வேண்டும். வடசென்னையை வளர்ச்சி சென்னையாக மாற்றுவதற்காக சிறப்பான திட்டங்களை கொண்டு வருகிறது திராவிட மாடல் ஆட்சி.
தேர்தல் வாக்குறுதி
வட சென்னையின் வளர்ச்சிக்காக ரூ.1000 கோடி நிதி ஒதுக்குவதாக சட்டமன்றத்தில் அறிவித்தோம். தற்போது, அந்த நிதி தொகையை ரூ.6,400 கோடியாக உயர்த்தியுள்ளோம். வட சென்னையை திராவிட மாடல் ஆட்சியில் வளர்ச்சி அடைய செய்வோம்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் போது, அளித்த வாக்குறுதிகளில் 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். நிச்சயம் அனைத்து வாக்குறுதிகளையும் விரைவில் நிறைவேற்றுவோம். அதேபோல், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் உள்ளிட்ட திட்டங்களைப் போன்று, தேர்தல் நேரத்தில் சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறோம்.
சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்யும் ஆட்சி திமுக ஆட்சி. வாக்களிக்க தவறியவர்களுக்காக ஆட்சி செய்து கொண்டிருக்கிறோம். புதுமைப்பெண் திட்டத்தால் பயன்பெற்ற மாணவிகள் என்னை அப்பா அப்பா என அழைக்கின்றனர்" என பேசினார்.