ரெட்டை கதிரே.. ஒரே பள்ளியில் சேர்ந்த 8 ஜோடி இரட்டையர்கள் - அதுவும் இந்தியாவில்!

India World
By Jiyath May 17, 2024 07:38 AM GMT
Report

மிசோரம் மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றில் புதிதாக 8 ஜோடி இரட்டை குழந்தைகள் சேர்ந்துள்ளனர். 

இரட்டை குழந்தைகள் 

மிசோரம் மாநிலத்தின் ஐஸ் வால் பகுதியில் தொடக்கப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் புதிதாக 8 ஜோடி இரட்டை குழந்தைகள் சேர்ந்துள்ளனர். இதில் 4 ஜோடி பெண் குழந்தைகளும், 3 ஜோடி ஆண் குழந்தைகளும் அடங்குவர்.

ரெட்டை கதிரே.. ஒரே பள்ளியில் சேர்ந்த 8 ஜோடி இரட்டையர்கள் - அதுவும் இந்தியாவில்! | Mizoram School Welcomes 8 Pairs Of Twins

இதே பள்ளியில் கடந்த கல்வியாண்டில் வெவ்வேறு வகுப்புகளில் 4 ஜோடி இரட்டை குழந்தைகள் பயின்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், புதிதாக சேர்ந்துள்ள இந்த 8 ஜோடி இரட்டையர்களில் ஒரு ஜோடி தலைமை ஆசிரியரின் குழந்தைகள் ஆவார்கள்.

உலகின் மிகப்பெரிய ஆலமரம்: 250 ஆண்டு பழமை, 3.5 ஏக்கர் - எங்குள்ளது தெரியுமா?

உலகின் மிகப்பெரிய ஆலமரம்: 250 ஆண்டு பழமை, 3.5 ஏக்கர் - எங்குள்ளது தெரியுமா?

புகைப்படம் வைரல் 

அவரது மகன் ரெம்ருதிகா மற்றும் மகள் லால்சார்ஜோவி ஆகியோர் எல்கேஜி-யில் சேர்ந்துள்ளனர். இதுகுறித்து அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் லால்வென்ட் லுங்கா கூறுகையில் "அதிக அளவாக இந்த ஆண்டு 8 ஜோடி இரட்டையர்கள் சேர்ந்து சாதனை படைத்துள்ளது. 

ரெட்டை கதிரே.. ஒரே பள்ளியில் சேர்ந்த 8 ஜோடி இரட்டையர்கள் - அதுவும் இந்தியாவில்! | Mizoram School Welcomes 8 Pairs Of Twins

இதனால் நாங்கள் மகிழ்ச்சியடைந்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளார். தற்போது இந்த 8 ஜோடி இரட்டை குழந்தைகள் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.