இரட்டை குழந்தைகளை கொன்று இந்திய தம்பதி தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்!
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
4 பேர் இறப்பு
அமெரிக்காவில் உள்ள சான் மேடியோவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆனந்த் சுஜித் ஹென்றி. இவரது மனைவி ஆலிஸ் பிரியங்கா. இவர்களுக்கு 4 வயதான இரட்டை ஆண் குழந்தைகள் இருந்தனர்.
இதில், ஆனந்த் சுஜித் ஹென்றி இந்தியாவை சேர்ந்தவர். இந்நிலையில், தம்பதியின் உறவினர்கள் அவர்களை தொடர்பு கொண்டபோது இருவரும் வெகுநேரம் பதில் அளிக்காததால் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசாரிடம் புகாரளித்துள்ளனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி - ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
தீவிர விசாரணை
உடனே சம்பவ இடம் விரைந்த போலீசார் அந்த வீட்டில் சென்று பார்க்கையில் தம்பதிகள் இருவரும் துப்பக்கிச்சூட்டு காயத்துடன் பாத்ரூமில் சடலமாக கிடந்துள்ளனர். மேலும், இரட்டை குழந்தைகள் மர்மமான முறையில் இறந்து இருப்பதும் தெரியவந்துள்ளது.
அதனையடுத்து 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். தொடர்ந்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.