கோவையில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை..!
கோவையில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை
கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பொறியாளர் ராஜேஷ், அவரது மனைவி லக்ஷயா இந்த தம்பதிக்கு யக்ஷிதா என்ற 10 வயது மகள் உள்ளார் இவர்களுடன் தாயார் பிரேமாவும் வசித்து வந்தார்.
இந்த நிலையில் வீட்டில் துர்நாற்றம் வீசியுள்ளதை அடுத்து அக்கம் பக்கதினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலின் பேரில் நிகழ்விடத்திற்கு வந்த போலீசார் கதவை திறந்து பார்த்த போது வீட்டில் இருந்து 4 பேரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

போலீசார் விசாரணை
இதையடுத்து உடல்களை மீட்ட பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ராஜேஷ் துாக்கிட்டும், மற்ற 3 பேர் விஷம் குடித்தும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
மேலும் கடன் தொல்லை காரணமாக கடந்த இரண்டு நாட்களே முன்பே அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    