மோடியுன் மேடையில் உட்கார மாட்டேன்; கூட்டணிக்கட்சி முதல்வர் அறிவிப்பு - அதிர்ச்சியில் பாஜக!
நரேந்திர மோடியுடன் இணைந்து மேடை ஏற மாட்டேன் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜோரம் தங்கா
மிசோரம் மாநிலத்தின் முதல்வர் ஜோரம் தங்கா. பாஜக தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் வடகிழக்கு ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக மிசோ தேசிய முன்னணி இயங்கி வருகிறது.

அங்கு 40 தொகுதிகளைக் கொண்ட பேரவைக்கு நவம்பர் 7-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து, வரும் 30-ம் தேதி அங்கு மேற்கு பகுதியில் பிரதமர் மோடி, தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியது.
கட்சிக்கு பின்னடைவு
இந்நிலையில், அந்த கூட்டணியில் உள்ள முதல்வர் ஜோரம் தங்கா, பிரதமர் மோடியுடன் இணைந்து பிரச்சாரம் மேற்கொள்ளப் போவதில்லை. மிசோரம் மக்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள்.

மணிப்பூரில் தேவாலயங்களை எரித்தபோது எங்கள் மக்கள் அதற்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்தனர். இத்தகைய சூழலில் பாஜகவுடன் பரிவு காட்டுவது எங்கள் கட்சிக்கு பின்னடைவாக அமையலாம்.
அதனால் பிரதமர் மோடி தனியாக பரப்புரை மேற்கொள்வதும், நான் தனியாக பரப்புரை மேற்கொள்வதும் தான் சரியாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
பதவி பறிப்பு முதல் பழிவாங்கல் நடவடிக்கைகள் வரை...! அம்பலப்படுத்திய சிறீதரன்: வெளிவந்த உண்மைகள் IBC Tamil