சிறைகளில் பாலியல் வன்கொடுமை; கைதிகளுக்கு சித்ரவதை - பகீர் தகவல்!
சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன கைதிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல்- ஹமாஸ்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே 1 மாதத்திற்கு மேலாகப் போர் தொடர்ந்து வருகிறது. ஹமாஸ் இந்த மோதலை ஆரம்பித்திருந்தாலும் கூட இப்போது இஸ்ரேல் தான் முழு வீச்சில் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
காசா மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்திய இஸ்ரேல், இப்போது தரைவழித் தாக்குதல்களையும் தீவிரப்படுத்தியுள்ளது. இதில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், பாலஸ்தீன கைதிகளை கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவது தொடர்பான பல குற்றச்சாட்டுகளை விசாரிக்க,
ஐக்கிய நாடுகளின் நிபுணர் இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘இஸ்ரேலிய மற்றும் சர்வதேச சட்டங்களின்படி தங்கள் ராணுவம் செயல்படுவதாகவும், கைதிகளுக்கு உணவு, தண்ணீர், மருந்து மற்றும் உடைகள் முறையாக வழங்கப்படுவதாகவும்’ தனி அறிவிப்பில் இஸ்ரேல் தெரிவித்து இருந்தது.
ஐநா கண்டனம்
சில கைதிகளை தூங்க அனுமதிக்காது சித்ரவதை செய்யப்படுவதாகவும் பாலியல் வன்முறைகளால் அச்சுறுத்தப்படுவதாகவும், அவமானகரமான செயல்களில் ஈடுபடுத்தப்படுவதாகவும், இஸ்ரேல் சிறைகளில் மலிந்திருக்கும் துயரங்கள் தொடர்பாக புகார்கள் வந்தது.
வளர்ந்து வரும் மீறல் முறை, பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாததுடன், பாலஸ்தீனியர்களை மேலும் துஷ்பிரயோகத்துக்கு ஆளாக்கும் சூழலை உருவாக்குகிறது. இந்த புகார்கள் தொடர்பாக உடனடியாக, பாரபட்சமின்றி மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் இஸ்ரேல் விசாரிக்க வேண்டும்.
தளபதிகள் உட்பட அனைத்து மட்டங்களிலும் பொறுப்பேற்க வேண்டும், அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு பெறவும் உரிமை உண்டு’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.