சிறையில்... சிகிச்சை அளிக்கச் சென்ற டாக்டர் - பாலியல் வன்கொடுமை செய்த கைதி!

Delhi Sexual harassment Crime
By Sumathi Sep 28, 2022 05:29 AM GMT
Report

சிறைக்குள் பெண் டாக்டரை கைதி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 பாலியல் வன்கொடுமை

டெல்லியில் உள்ள மண்டோலியில் சிறை ஒன்று உள்ளது. இங்கு சிகிச்சை அளிப்பதற்காக பெண் டாக்டர் ஒருவர் இருக்கிறார். இவர் வழக்கம்போல கைதிகளின் உடல்நிலையை பரிசோதனை செய்துள்ளார்.

சிறையில்... சிகிச்சை அளிக்கச் சென்ற டாக்டர் - பாலியல் வன்கொடுமை செய்த கைதி! | Prisoner Tried To Rape A Female Doctor

அப்போது பாலியல் வழக்கில் தொடர்புடைய விசாரணை கைதி ஒருவர், திடீரென அந்த டாக்டரை குளியல் அறைக்குள் தள்ளி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தொடர்ந்து பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

அதில் டாக்டர் அலறியதால் சிறை காவலர்கள் விரைந்து வந்து அவரை மீட்டுள்ளனர். அதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.