வைரஸ் பரவும் அபாயம்..புதிய ஆடைகள் வாங்குறீங்களா? தப்பி தவறியும் இதை செய்ய கூடாது!
புதிய ஆடைகள் வாங்கும்போது நாம் செய்யவே கூடாத தவறுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
புதிய ஆடைகள்
நாம் கடைக்கு சென்று வாங்கி வரும் ஆடைகள் அனைத்தையும் நாம் தான் முதலில் உடுத்துகிறோமா என்றால் அது நிச்சயம் கேள்விக்குறிதான். அந்த ஆடையை ட்ரையல் ரூமிற்கு எடுத்து சென்றுஅதன் அளவு சரியாக இருக்கிறதா என்பதை சரி பார்க்க அதை உடுத்தி பார்ப்பார்கள். அப்படி செய்யும் போது புது ஆடையில் வியர்வைப்படும்.
இந்த மாதிரியான செயல்களால் ஆடைகளில் தொற்று நோய்களுக்கு வழிவகுக்கும். இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில்,’’ ஷோரூம்களில் உள்ள ட்ரையல் ரூமில் நாம் வாங்கிய உடைகள் சரியான அளவில் இருக்கிறதா என முயன்ற பிறகு மீண்டும் ராக்கி வைக்கின்றனர் .
அப்போது அந்த நபரின் வியர்வை அல்லது அழுக்கு ஆடைகளில் பாக்டீரியாக்கள் படிந்து இருக்கும். மேலும் இந்த ஆடையை வேறு ஒருவர் அணிந்தால், வைரஸ்கள் பரவ வாய்ப்புள்ளது. எனவே, புதிய ஆடைகளை அணிவதற்கு முன்பு எப்போதும் துவைக்க வேண்டும்.
பாக்டீரியாக்கள்
அதுமட்டுமில்லாமல்,’’பல சமயங்களில், ஆடை தொழிற்சாலைகள் ஃபார்மால்டிஹைடு போன்ற இரசாயனங்களைத் துணிகளுக்குச் சாயம் மற்றும் மென்மையாக்கப் பயன்படுத்துகின்றன. இதனால் மொல்லஸ்கம் போன்ற வைரஸ் நோய் தொற்று ஏற்படும்.
குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களின் சருமத்திற்கு கேடு விளைவிக்கும். எனவே, புதிய ஆடைகளை அணிவதற்கு முன்பு எப்போதும் துவைத்து அணிய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.